TN Corona Update: ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று; தமிழ்நாடு கொரோனா நிலவரம் இதோ!

TN Corona Update: தமிழ்நாடு கொரோனா நிலவர விவரம் இக்கட்டுரையில் இருக்கிறது.

Continues below advertisement

TN Corona Update:

Continues below advertisement

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 824 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 1,140 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் யாரும் புதிதாக இன்று உயிர் இழக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. . 

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,972 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 35,11,249 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை  38,033 பேர் என்று மாநில  மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

 

மாவட்ட நிலவரம்

சென்னையில், 156 பேருக்கும், செங்கல்பட்டு 61 பேருக்கும், கோவையில் 90 பேருக்கும், ஈரோடில் 50 பேருக்கும், சேலத்தில் 41 பேருக்கும், திருவள்ளூரில் 23 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 26 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உயிரிழப்பு:

இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 33 ஆக உள்ளது. 

கொரோனாவில் இருந்து பாதுகாக்க...

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். தேவையின்றி கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம். பொது இடங்களில் தனிமனித இடைவெளியை அவசியம் கடைபிடிக்கவும். கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நம்மை அச்சுறுத்தி வருகிறது. அதிலிருந்து பூரணமாக மீளும் வரை நாம் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டிய கட்டயாத்தில் இருக்கிறோம். ஒன்றிணைவோம்; கொரோனாவை வெல்வோம். 

கொரோனா வைரஸை குணப்படுத்த இதுவரை மருத்துங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. கொரோனா நம்மை தாக்காமல் பாதுக்காக்க தடுப்பூசி போட்டு கொள்வது மிக அவசியம். இரண்டு தவணை தடுப்பூசி உடன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போட்டுகொள்ளுங்கள். தடுப்பூசி போட்டு கொண்ட ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களுக்கே இரண்டு முறைக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது உங்களுக்கு நினைவு இருக்கும். உடல் ஆரோக்கியத்துடன் இருங்கள். நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருந்தால் தொற்று நம்மை அண்டாது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola