TN Corona Update: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் இத்தனை பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..

TNCoronaUpdate: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,211 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று மற்றும் 1,616 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

Continues below advertisement

TNCoronaUpdate: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,211 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று மற்றும் 1,616 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 268 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,288 ஆக இருந்த நிலையில் இன்று 1,211 ஆக குறைந்துள்ளது.  தொற்று பாதிப்பால் நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

 

மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்,

 

தமிழ்நாட்டில் இன்று தொற்றிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள்,

சென்னையில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்,

தமிழ்நாட்டில் 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு விபரம் மற்றும் இன்றைய பெருந்தொற்று பற்றிய முழு விபரம்,

கொரோனாவில் இருந்து பாதுக்காக்க...

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க பொதுஇடங்களில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். தேவையின்றி கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம். பொதுஇடங்களில் தனிமனித இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்கவும். கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நம்மை அச்சுறுத்தி வருகிறது. அதிலிருந்து பூரணமாக மீளும் வரை நாம் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டிய கட்டயாத்தில் இருக்கிறோம். ஒன்றிணைவோம்; கொரோனாவை வெல்வோம். 

கொரோனா வைரஸை குணப்படுத்த இதுவரை மருத்துங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. கொரோனா நம்மை தாக்கமால் பாதுக்காக்க தடுப்பூசி போட்டு கொள்வது மிக அவசியம். இரண்டு தவணை தடுப்பூசி உடன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போட்டுகொள்ளுங்கள். தடுப்பூசி போட்டு கொண்ட ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களுக்கே இரண்டு முறைக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது உங்களுக்கு நினைவு இருக்கும். உடல் ஆரோக்கியத்துடன் இருங்கள். நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருந்தால் தொற்று நம்மை அண்டாது.


 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement
Sponsored Links by Taboola