TNCoronaUpdate: இன்றைய பாதிப்பு:


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,094 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தொற்று பாதிப்பால் இன்று புதிதாக யாரும் உயிர் இழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு- கொரோனா பாதிப்பு விவரம்:


தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35,51,641 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 35,03,47 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை  38,033 பேர் என்று மாநில  மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. 


மாவட்ட நிலவரம்


சென்னையில், 239 பேருக்கும், செங்கல்பட்டு 94 பேருக்கும், கோவையில் 127 பேருக்கும், ஈரோடில் 20 பேருக்கும், சேலத்தில் 56 பேருக்கும், திருவள்ளூரில் 33 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 27 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


பரிசோதனை:


தமிழ்நாட்டில் இன்று மட்டும் 28 ஆயிரத்து  219 பேருக்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் 6.8 (6,83,21,026) கோடி கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.


உயிரிழப்பு:


இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 33 ஆக உள்ளது.