தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி, புதிதாக 1512 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,14,872ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 189 பேரும், கோவையில் 173 பேரும், ஈரோட்டில் 141 பேரும், தஞ்சாவூரில் 98 பேரும், செங்கல்பட்டில் 95 பேரும், நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இதுவரை 16,850 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஆண்கள் 874 பேருக்கும், பெண்கள் 638 பேருக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆண்கள் 1526884 பேருக்கும், பெண்கள் 1087950, மூன்றாம் பாலினத்தவர் 38 பேரும் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 1725 பேர் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியுள்ளனர். இன்று சிகிச்சை பலனின்றி 22 பேர் உயிரிழந்தனர். இதுவரை 34921 பேர் உயிரிழந்துள்ளனர்.