தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1804 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1917 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வெளியாகியுள்ளனர். இன்று கொரோனாவுக்கு 32 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 209 பேரும், கோயம்பத்தூரில் 206 பேரும்,  ஈரோட்டில் 167 பேரும், தஞ்சாவூரில் 121 பேரும் , சேலத்தில் 123 பேரும், செங்கல்பட்டில் 110  பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.