Tamil Nadu Coronavirus LIVE: தமிழ்நாட்டில் 51வது நாளாக கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை குறைந்தது
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனாவால 2775 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது 47 பேர் மரணமடைந்துள்ளனர். இணைநோய்கள் இல்லாதவர்களில் 9 பேர் இறந்துள்ளனர். 50 வயதுக்கு உட்பட்டவர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 51வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது
சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்வதற்கான இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. http://gccvaccine.in என்ற இணையதளத்தில் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பொதுஇடங்களில் மக்களின் கூட்டம் இன்று அதிகமாக இருக்கும் நிலையில், கொரோனா தொற்று பரவல் முடிந்துவிட்டதாக மக்கள் எண்ணக் கூடாது. தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும். கொரோனா 3ஆம் அலை வராமல் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கடைகளும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் புதுச்சேரியில் அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள முதலில் மக்களுக்கு தயக்கம் இருந்தது தற்போது அதில் இருந்து வெளியே வந்துள்ளனர். புதுச்சேரியில் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
இங்கிலாந்து நாட்டில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. கொரோனா இரண்டாவது அலையை விட பாதிப்பு மோசமாகி வருகிறது.
மலைப் பிரதேசங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறைச் செயலாளர் தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மலைப் பிரதேசங்கள் மற்றும் இதர சுற்றுலாப் பகுதிகளில் கொவிட் சரியான நடத்தை விதிமுறை பின்பற்றப்படவில்லை என்று ஊடக செய்திகள் தெரிவித்திருப்பது தொடர்பாக மத்திய உள்துறைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்தார்
கொரோனா தொற்று பரவலில் தோல்வியுற்றதனால், அமைச்சரவையை மாற்றியமைத்திருப்பது வெறும் ஏமாற்று வேலை. மோடி பதவி விலகியிருக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கொரோனா நோய்தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்தது
கடந்த 24 மணிநேரத்தில் 41,506 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவருபவரின் எண்ணிக்கை 454118 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிய பாதிப்புகளை விட கூடுதலானோர் குணமடைந்துள்ளனர் (41526). கொரோனா நோய்த் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 895 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மே மாதம் 2021 முதல் 00.07.2021 வரை கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 6,130 நிறுவனங்களிடமிருந்தும் மற்றும் 30,755 தனிநபர்களிடமிருந்து ரூ.3.2245,700/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யப்பட்ட 1613 மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்களில் மாநகராட்சி வருவாய்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 39 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை ரூ.167,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்பொழுது பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வணிக வளாகங்கள் அமைந்துள்ள தியாகராயநகர் மற்றும் பாடி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மாநகராட்சி மற்றும் காவல்துறையின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது இவ்விரு பகுதிகளிலும் 28 கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு சமூக இடைவெளியை பின்பற்றாத காரணத்திற்காகவும், முகக் கவசம் அணியாத நபர்களிடமிருந்தும் இன்று (10.07-2021) ஒரு நாள் மட்டும் ரூ. 3,33,800/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் வணிக வளாகங்கள், அங்காடிகள் உட்பட பல்வேறு பொதுஇடங்களுக்கு செல்லும் போதும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும் கட்டாயம் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும் என கேட்டுகொள்ளப்படுகிறது.
இன்று கேரளாவில் முழுஊரடங்கு நிலை அமல்படுத்தப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 14,087 பேருக்கு புதிதாக கொரோன நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.
Background
கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனாவால 2775 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது 47 பேர் மரணமடைந்துள்ளனர். இணைநோய்கள் இல்லாதவர்களில் 9 பேர் இறந்துள்ளனர். 50 வயதுக்கு உட்பட்டவர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 51வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -