Tamil Nadu Coronavirus LIVE : தஞ்சாவூரில் இன்று அதிகபட்சமாக கொரோனாவுக்கு 26 பேர் பலி
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 013 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,60,194 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 4,013 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 92 ஆயிரத்து 420 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 33 ஆயிரத்து 224 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 227 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 238 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 227 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 115 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,933 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 93 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 22 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 20 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8196 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் 26, சென்னை 20, திண்டுக்கல், ஈரோடு, மதுரையில் தலா 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முழுவதுமே இறப்பு சான்றிதழில் கொரோனா மரணம் என குறிப்பிடுவதில்லை. தேவைப்பட்டால் கொரோனா மரணம் என தனியாக இறப்பு சான்றிதழ் வாங்கிக் கொள்ளலாம் - மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கொரோனா பாதிப்பு உயிரிழப்பில் இருந்து 98 சதவீதம் தற்காத்துக் கொள்ள முடியும் - நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால்
கொரோனா மரணங்களை தமிழ்நாடு அரசு மறைக்கவில்லை என்றும், தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள சூழலில், மக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மரணத்திற்கான காரணம் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவை திருத்திக்கொள்ள வாய்ப்புள்ளது என்று கூறிய அவர், கொரோனா இறப்பு தொடர்பாக திருத்தம் மேற்கொள்ள முறையான ஆவணங்களுடன் அரசு மருத்துவமனையை அணுகலாம் என்றும் கூறினார்
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா ஓக்லண்ட் நகரில் செயல்படும் வனவியல் பூங்காவில் உள்ள சிங்கம், புலி, கரடிகளுக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன.
முன்னதாக, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 வயது உடைய நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா இரண்டாவது அலையில் கர்ப்பிணி பெண்களின் இறப்பு, முதல் அலையை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்த காரணத்தினால் இந்த முடிவை எடுக்கப்பட்டதாக நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின், செயற்குழு உறுப்பினர் டாக்டர் என்.கே. அரோரா தெரிவித்தார். கொரோனா தடுப்பூசியால் கர்ப்பிணி பெண்களும் பயன் அடைய வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போட்டால், அது தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தைக்கும் பாதுகாப்பு. அதனால் கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போட முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
நாடு முழுவதும், கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று முதல் தொடங்கியது. நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) பரிந்துரைகளின் அடிப்படையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியின் ஒட்டுமொத்த செயல்திறன் 77.8 சதவீதம் என கண்டறியப்பட்டது. 3ம் கட்ட பரிசோதனை, இந்தியாவில் 25,800 தன்னார்வலர்களிடம் இந்நிறுவனம் மேற்கொண்டது. தீவிர அறிகுறி கொண்ட கொரோனா தொற்றுக்கு 93.4% பாதுகாப்பை கோவாக்சின் தருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10,042 கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேருக்கு புதிதாக கொரோனா பதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 738 பேர் நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தனர்.
கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகம் உள்ள ஆறு மாநிலங்களுக்கு உதவ மத்திய அரசு சிறப்புக் குழுக்களை அனுப்பி வைத்துள்ளது.
கேரளா, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஓடிசா, சட்டீஸ்கர், மணிப்பூர் ஆகிய ஆறு மாநிலங்களில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் தேவையான தொழில்நுட்ப உதவியை மாநில அரசுகளுக்கு வழங்கும் வகையில் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் பல்துறை சார்ந்த உயர்மட்ட மத்திய குழுக்களை அனுப்பி உள்ளது.
இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 30 பேர் கொரோனாவால் இறந்ததாக தமிழ்நாடு அரசின் மருத்துவ அறிக்கை கூறுகிறது. மாநிலத்தில் நேர்ந்த இறப்புகளில் (97) சுமார் மூன்றில் ஒரு பங்கு இந்த ஒரு மாவட்டத்தில் நேர்ந்திருக்கிறது. ஏன்? என விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Background
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 013 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,60,194 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 4,013 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 92 ஆயிரத்து 420 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 33 ஆயிரத்து 224 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 227 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 238 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 227 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 115 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,933 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 93 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 22 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 20 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8196 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் 26, சென்னை 20, திண்டுக்கல், ஈரோடு, மதுரையில் தலா 6 பேர் உயிரிழந்துள்ளனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -