Tamil Nadu Coronavirus LIVE : தமிழகத்தில் மேலும் 3,367 பேருக்கு கொரோனா தொற்று
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
செங்கல்பட்டு வளாகத்தில் தடுப்பூசி தயாரிக்க யாரும் டெண்டர் கோரவில்லை என்று மத்திய ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் எம்பி ரவிக்குமார் எழுதிய கடிதத்திற்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். தடுப்பூசி தயாரிப்பு வளாகத்தை தனியாருக்கு ஏலம்விட மார்ச் 27ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டதாகவும், டெண்டர் காலம் நீட்டிக்கப்பட்டும் கூட அந்த நிறுவன ஏலத்தை எடுக்க யாரும் முன்வரவில்லை எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின், வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (Weekly Positivity Rate) ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து 2.39 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று உறுதி வீதம் (Daily positivity Rate), தொடர்ந்து 16 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.29 சதவீதமாக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வருவதையடுத்து, தினசரி குணமடைவர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
கொரோனா விதிமுறைகள் மீறியதாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 345 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழ்நாட்டில் 45 -60 வயதுக்குட்பட்ட மக்களில் 38 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 35 சதவீதம் பேருக்கு இது வரை முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தற்போதைய புதிய பாதிப்புகளில், 51% சதவித பாதிப்புகள் புதிய உருமாறிய டெல்டா கொரோனா தொற்று என அமெரிக்கா நோய்த் தடுப்பு முகமை தெரிவித்துள்ளது.
கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் இன்று (07.07.2021) மருத்துவ முகாம்கள் (Medical Camp - SWAB test) நடைபெறும் இடங்கள்.
கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் 18004255019, 0422-2302323, 9750554321.
ஈரோடு மாவாட்டத்தில் இன்று மதியம் 2 மணிக்கு மேல் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் நிர்வகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய புதிய கொரோனா பாதிப்புகளில் 80 சதவீதம், வெறும் 90 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. எனவே, உள்ளூர்மட்ட அளவிலான தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது அவசியம் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 43,733 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 47240 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 459920 ஆகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 55-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, 37.07 கோடிக்கும் அதிகமான (37,07,23,840) தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 23,80,000 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன என மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்தது.
தடுப்பூசி தயாரித்தவுடன் , தரம் மற்றும் பாதுகாப்பு பரிசோதனைக்கு செல்வதால் அவை உடனடியாக மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுவதில்லை என்று தெளிவுபடுத்தியது.
தமிழ்நாட்டில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் (1,70,18,843) போடப்பட்டுள்ளன. மொத்த பயனாளிகளில், வெறும் 4.8% பேர் மட்டுமே இரண்டு தடுப்பூசி டோஸ்களை போட்டுக் கொண்டுள்ளனர்.
Background
மாநிலத்தின் தினசரி கொரோனா பாதிப்பில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், அங்கு 311 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 302 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 3885 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையை விட ஈரோட்டில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -