Tamil Nadu Coronavirus LIVE : தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 4000 கீழ் குறைந்தது

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 04 Jul 2021 08:17 PM
சென்னையில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் இல்லை

சென்னையில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் இல்லை. தடுப்பூசி வந்தவுடன் முகாம் குறித்து அறிவிக்கப்படும் - சென்னை மாநகராட்சி

தமிழ்நாட்டில் இன்று 3,867 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 3 ஆயிரத்து 867 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,57,791 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 3,867ஆக உள்ளது.


இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 96 ஆயிரத்து 287 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 33 ஆயிரத்து 432 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 222 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 227 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 222 ஆக உள்ளது.


கோவை 445, ஈரோடு 349, சேலம் 245, திருப்பூர் 225, தஞ்சாவூர் 227, செங்கல்பட்டு 184, நாமக்கல் 114, திருச்சி 166, திருவள்ளூர் 99, கடலூர் 96, திருவண்ணாமலை 127, கிருஷ்ணகிரி 87, நீலகிரி 74, கள்ளக்குறிச்சி 95, கன்னியாகுமரி 78, மதுரை 75, விழுப்புரம் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, வேலூரில் நேற்றைவிட இன்று பாதிப்பு அதிகரித்துள்ளது.


கொரோனாவால் மேலும் 72 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,005 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 54 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8222 பேர் உயிரிழந்துள்ளனர்.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் 8, சேலம் 7,திருச்சி, கோவை தலா 6 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் 15 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. 

பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி - இன்னும் முடிவெடுக்கவில்லை

பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாளை முதல் கோவில்களில் தரிசனம் செய்ய அனுமதி

கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நாளை முதல் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் இதுவரை 1.26 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இதுவரை 1.26 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்   4.73 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் நிர்வகிக்கப்பட்டுள்ளது. இது, ஒரு நாளில் போடப்பட்ட அதிகபட்ச தடுப்பூசி  எண்ணிக்கையாகும்.   

ஹைதராபாதில் புதிய தடுப்பூசி பரிசோதனை ஆய்வகம்

ஹைதராபாதில் புதிய தடுப்பூசி பரிசோதனை ஆய்வகம் ஒன்றை அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியைக் கட்டாயப்படுத்திய முதல் நாடு தஜகிஸ்தான்

நாட்டு மக்கள் அனைவரும் கட்டாம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தஜகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசியைக் கட்டாயப்படுத்திய முதல் நாடு இதுவாகும்.    

கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படவில்லை

கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்று பொதுமக்களுக்கான தடுப்பூசி போடப்படப்படவில்லை  

கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகரிப்பு

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கேரளாவில் 83 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் தொற்று உறுதி விகிதம் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது.      

கொரோனா தொற்றுக்கு 955 உயிர்களை இந்தியா இழந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் 955 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதன்மூலம், நாட்டின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 4,02,004 ஆக அதிகரித்துள்ளது.    


 


கொரோனா தொற்று விதிமுறைகளை மீறியதாக திருச்சி மத்திய மண்டலத்தில் மட்டும் ரூ.10 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது

கொரோனோ இரண்டாவது அலை பரவல் மற்றும் மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாட்களில் தொடர்ந்து அரசின் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது.


இதன்படி, தற்போது தமிழகம் முழுவதும் கடந்த 1ம் தேதி வரை 37.71 லட்சம் நபர்கள் மீது அரசின் பொது சுகாதாரத் துறை சட்டம் மூலமாக 67.17 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மத்திய மண்டலத்தில் திருச்சியில் மாவட்டத்தில் 1,03,025 பேரிடம் இருந்து ரூ.2.38 கோடியும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,79,805 பேரிடம் இருந்து ரூ.3.88 கோடியும், நாகை மாவட்டத்தில் 32 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ. 62 லட்சமும், திருவாரூர் மாவட்டத்தில் 27 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ. 60 லட்சமும், அரியலூர் மாவட்டத்தில் 43 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.97 லட்சமும், பெரம்பலூர் மாவட்டத்தில் 14 ஆயிரம் ேபரிடம் இருந்து ரூ. 37 லட்சமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 35 ஆயிரம் ேபரிடம் இருந்து ரூ. 78 லட்சமும், கரூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ. 91 லட்சமும் என்று மொத்தம் தற்போது வரை ரூ.10.51 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

'டெல்டா பிளஸ்' தொற்றுக்கு தடுப்பூசி பாதுகாப்பு அளிக்குமா? மத்திய அரசு பதில்

டெல்டா வகை கொரோனா தொற்றுக்கு கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பை தருவதாக மத்திய அரசு தெரிவித்தது. 'டெல்டா பிளஸ்' தொற்றுக்கு எதிரான பாதிப்பு குறித்து ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முடிவுகள் ஏழு முதல் பத்து நாட்களில் வெளியாகும் என்றும் தெரிவித்தது.            


 


இந்தியாவில் 35 கோடிக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன

இந்தியாவில் 35 கோடிக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, பிகார், குஜராத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் 18-44 வயது பிரிவனருக்கு 50 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியுள்ளன.


 


  


நாடு முழுவதும் 43,071 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 43,071 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், 52,299 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 



 

இன்றைய தேவை சுயகட்டுப்பாடுதான்! - முதல்வர் வேண்டுகோள்

வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் குறைகிறது - மத்திய அரசு

மேகாலயா தவிர அனைத்து வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதாக வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.


வடகிழக்கு பகுதியில் 2021 ஜூன் 30 அன்று 3.96 சதவீதமாக இருந்த தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம், ஜூலை 2 அன்று 2.94 சதவீதமாக குறைந்துள்ளது.  


 

Thanjavur Positivity rate: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொற்று உறுதி விகிதம் 5.1%-ஆக அதிகரிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4653 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில் 239 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தின் தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 5.1 ஆக அதிகரித்துள்ளது.  மாநிலத்தின் தொற்று உறுதி விகிதம் 2.6 ஆக குறைந்துள்ளது.



    

Background

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 3 ஆயிரத்து 867 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,57,791 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 3,867ஆக உள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.