Coronavirus LIVE Updates: கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரிப்பு

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 25 Jul 2021 07:25 PM
கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரிப்பு

கேரள மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலேயே இருந்து வருகிறது.இன்றைய நிலவரப்படி அங்கே 17,466 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.மேலும் 66 மரணங்கள் பதிவாகியுள்ளன. பாசிட்டிவ் ரேட் தொடர்ந்து அதிகமாக உள்ளது இன்றைய நிலவரப்படி 12.3 சதவிகிதம் பதிவாகியுள்ளது.

டெல்லியில் இன்று 66 பேருக்கு கொரோனா

டெல்லியில் இன்று 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 72 பேர் குணமடைந்துள்ளனர்.


 





புதுடெல்லியில் நாளை முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி

புதுடெல்லியில் கோவிட்-19 தொற்றுப் பரவல் குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில்களில் நாளை முதல் 100 சதவீத இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி


 

3,29,38,559 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் கையிருப்பில் உள்ளன


நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 45 கோடிக்கும் (45,37,70,580) அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 11,79,010 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன. இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 42,08,32,021 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.


சுமார் 3 (3,29,38,559) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.



கொரோனா நிவாரண உதவிப் பொருட்களுடன் இந்தோனேசியா சென்றடைந்தது ஐஎன்எஸ் ஐராவத் கப்பல்

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐராவத் கப்பல், கொவிட்-19 நிவாரண உதவிகளுடன் இந்தோனேசியாவின் ஜகார்தா துறைமுகத்தை நேற்று (ஜூலை 24, 2021) சென்றடைந்தது. பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தோனேசியாவிற்கு ஆதரவளிப்பதற்காக 5 கிரையோஜனிக் கொள்கலன்களில் 100 மெட்ரிக் டன் திரவ பிராணவாயு மற்றும் 300 செறிவூட்டிகளை இந்தக் கப்பல் கொண்டு சென்றுள்ளது.


 

கோயம்பத்தூர் மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் இல்லை

இன்று கோயம்பத்தூர் மாவட்டம் முழுவதும் எங்கும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை   

4.81 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு

தமிழகத்திற்கு நேற்று வந்த 4.81 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு விவரம் - 



ஐந்து மருத்துவ உபகரணங்களின் விலை சரிந்துள்ளது

கடந்த ஜூலை 13ம் தேதி தேசிய மருந்து விலை ஆணையகம் (என்பிபிஏ) பல்ஸ் ஆக்ஸிமீட்டர், ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் இயந்திரம், நெபுலைசர், மின்னணு வெப்பமானி, க்ளூகோமீட்டர் ஆகிய உபகரணங்களின் விநியோகஸ்தர்களுக்கான விலையில் 70% வரை நிர்ணயம் செய்தது. இதுபோன்ற மருத்துவ உபகரணங்களில் மொத்தம் 684 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. விற்பனை விலை சரிந்துள்ளதாக 620 நிறுவனங்கள் (91%) தெரிவித்துள்ளன.


அதிகபட்சமாக, இறக்குமதி செய்யப்படும் பல்ஸ் ஆக்சிமீட்டரின் விலை ஒரு அலகிற்கு ரூ. 2,95,375 ஆகக் குறைந்துள்ளது.











































































Sl. No



 


 


Medical Devices



 


No of Brands Reported after the Notification



 


No of Brands reported Downward revision of MRP



 


Maximum Reduction Reported in MRP



 



 



 



 



Rs



Percentage



1A



Pulse Oximeter - Finger tip



136



127 (93%)



5,150



88%



1B



Pulse Oximeter - Others



73



62 (85%)



2,95,375



47%



 


2



Blood Pressure Monitoring Machine



 


216



 


195 (90%)



 


6,495



 


83%



3



Nebulizer



137



124 (91%)



15,175



77%



 


4



Digital Thermometer



 


88



 


80 (91%)



 


5,360



 


77%



5



Glucometer



34



32 (94%)



1,500



80%



 



Total



684



620 (91%)


 



 

Background

நாடு முழுவதும் 43 கோடிக்கும் அதிகமானோருக்கு (43,26,05,567) கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.  18-44 வயது பிரிவில் இருக்கும் 13,77,91,932 பேர் முதல் டோசையும், 60,46,308 நபர்கள் இரண்டாம் டோசையும் இதுவரை பெற்றுள்ளனர்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.