Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் 1908 பேருக்கு கொரோனா 29 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 03 Aug 2021 07:52 PM
தமிழ்நாட்டில் 1908 பேருக்கு கொரோனா 29 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதுநாள்வரையிலான கொரோனா பாதிப்பு 25,65,452 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனையில் 23 பேரும் தனியார் மருத்துவமனையில் 6 பேரும் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 

கேரளாவில் புதிதாக 23,676 பேருக்கு கொரோனா

கேரளாவில் புதிதாக 23,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,626 பேர் குணமடைந்துள்ளனர். 148 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா 2ஆவது அலை இன்னும் முடியவில்லை

இந்தியாவில் கொரோனா 2ஆவது அலை இன்னும் முடிவடையவில்லை. 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். கேரளாவில் மட்டும்தான் கொரோனாவுக்கு அதிக நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய அளவில் அதிகமான நபர்கள் சிகிச்சை பெறும் மாநிலங்களில் தமிழ்நாடு 5ஆவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரித்துள்ளது - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால்

இந்தியாவில் தற்கொலைகளில் கோவிட் தாக்கத்தைக் குறித்து அரசு ஆய்வு செய்யவில்லை - உள்துறை அமைச்சகம்



இந்தியாவில் புதியதாக 30,549 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 38 ஆயிரத்து 887 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று 4 லட்சத்து 13 ஆயிரத்து 718 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தனர். இன்றைய நிலவரப்படி, 4 லட்சத்து 4 ஆயிரத்து 958 பேர் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

கோவையில் இன்று முதல் காய்கறி, மளிகை கடைகள், வணிக வளாகங்களுக்கு கட்டுப்பாடுகள்

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தொற்று பரவல் அதிகம் உள்ள இடங்களில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று முதல் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணக முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட உள்ளது. மீன் மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், டாஸ்மாக் கடைகள் 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள வணிக வளாங்கள் ஞாயிற்றுகிழமைகளில் மட்டும் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

Tamil Nadu Daily Covid-19 Cases: தமிழகத்தில் இன்று கோவிட்-19 தொற்று 1,957 பேருக்கு உறுதி

தமிழகத்தில் இன்று கோவிட்-19 தொற்று 1,957 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 20,385 ஆக அதிகரித்துள்ளது  

கேரளாவில் இன்று 118 பேர் கொரோனாவுக்கு பலி 

கேரளாவில் புதிதாக 13,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 15,923 பேர் குணமடைந்த நிலையில் இன்று 118 பேர் உயிரிழந்துள்ளனர்.

புனேவில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

கேரளாவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் புனேவில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவுக்கு உயர்மட்ட சுகாதார குழுவை மத்திய அரசு அனுப்பியது.

மதுரை மலர் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது

கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையில் அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத மதுரை மலர் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 


 


கொரோனா பரவல் - ஈரோடு மாவட்டத்தில் நாளை சுவாமி தரிசனம் செய்ய தடை

டெல்லியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

நாட்டில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக 10 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. டெல்லியில் கட்டுக்குள் வந்த கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 85 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 83 பேர் குணம் அடைந்துள்ளனர். டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக கொரோனாவால் குணம் அடைபவர்களை காட்டிலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பு : ஆஸ்திரேலிய தெருக்களில் ராணுவம் கண்காணிப்பு

உருமாறிய டெல்டா வகை கொரோனா உலகம் முழுவதும் 130 நாடுகளில் பரவியுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அந்த நாட்டில் பிரிஸ்பேனில் செவ்வாய்கிழமை வரை நீட்டிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு, தற்போது ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் பிரிஸ்பேன் நகரத்தின் தெருக்களில் ராணுவம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவில் புதியதாக 40,134 பேருக்கு கொரோனா

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதியதாக 40 ஆயிரத்து 134 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 16 லட்சத்து 95 ஆயிரத்து 958 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனாவால் நாடு முழுவதும் 422 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 24 ஆயிரத்து 773 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 39 ஆயிரத்து 946 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதுவரை 3 கோடியே 8 லட்சத்து 57 ஆயிரத்து 467 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது வரை 47 கோடியே 22 லட்சத்து 23 ஆயிரத்து 639 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

Background

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 41 ஆயிரத்து 831 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியே 16 லட்சத்து 55 ஆயிரத்து 824 நபர்கள் என்று பதிவாகியுள்ளது.


அதேபோல, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பிற்கு நேற்று ஒரே நாளில் 541 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 24 ஆயிரத்து 351 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 258 ஆக பதிவாகியது. இதனால், நாட்டில் தற்போது 4 லட்சத்து 10 ஆயிரத்து 952 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.