Tamil Nadu Coronavirus LIVE: தமிழ்நாட்டில் வீணான தடுப்பூசிகள் எண்ணிக்கை 2%க்கும் கீழ் குறைந்தது
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் திறமையான தொழிலாளர் சக்தி தான் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவியது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்தியாவின் திறமையான தொழிலாளர் சக்தி தான் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவியது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,97,058 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 20, 34, 632 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 14, 62, 426 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்
தமிழ்நாட்டில் தடுப்பூசி போடப்படும் தொடரந்து அதிகரித்து வருவதால், தடுப்பூசி வீணாகும் எண்ணிக்கை 2%க்கும் கீழ் குறைந்ததாக மாநில சுகாதாரத் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பயனாளிகளில் 14% பேர கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போட்டுக் கொண்டுள்ளனர். 4% பேர் இரண்டு கட்ட தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ளனர்.
கோவிட்-19 க்கான தடுப்பு மருந்து மாநில அரசுகளுக்கு போதிய அளவு வழங்கப்படவில்லை என வெளியான செய்திகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், "சமூக வலைதளத்தில் இக்கருத்தை பதிவு செய்துள்ள அவர், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதாக குறை கூறியுள்ளார். ஜுன் மாதத்தில் மாநில அரசுகளுக்கு 11 கோடிக்கும் கூடுதலான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜுலை மாதத்தை பொறுத்தவரை 13 கோடிக்கும் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்டத்தில் நாளை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்கு தற்போது நாடு முழுவதும் 4,32,041 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்புகளில் இது 1.39 சதவிதமாகும்.97 சதவிதம் பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
பொது இடங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி, விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா வலியுறுத்தினார்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இன்னும் நீங்கவில்லை என்று எச்சரித்த அவர், பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, தடுப்பூசி, கொவிட் சரியான நடத்தை விதிமுறையைப் பின்பற்றுதல் ஆகிய 5 உத்திகளில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறும் மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 41,806 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 39,130 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 581 பேர் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் அநேக மாநிலங்களில் தற்போது புதிய உருமாறிய டெல்டா வகை கொரோனா பாதிப்பு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. B.1.1.7-Alpha, B.1.351- Beta, P.1- gamma வகை தொற்றின் பாதிப்புகளை விட டெல்டா வகை தொற்றுகள் அகிகம் பரவத் தொடங்கியுள்ளன.
இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வகை( B.1.1.7-Alpha), தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட வைரஸ் வகை (B.1.351- Beta), பிரேசிலில் முதன்முறையாக கண்டறிப்பட்ட கொரோனா வைரஸ் (P.1- gamma), இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட (B.1.617.2- டெல்டா வகை) ஆகிய நான்கு மாறுபட்ட வைரஸ்கள் மிகவும் கவலையளிக்கக் கூடியதாக (Variation Of Concern) வகைப்படுத்தப்பட்டுள்ளது
இந்தோனேசியா நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 54,517 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது, அந்நாட்டின் ஒருநாள் அதிகபட்ச கொரோனா பகதிப்பு எண்ணிக்கையாகும். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 991 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசிய தற்போது ஆசியாவின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது.
5500 கோசிஷீல்டு தடுப்பூசிகள்: அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் மட்டும் தடுப்பூசிகள் இன்று நிர்வகிக்கப்படும்.
8900 கோவாக்சின் : ஊரகப் பகுதிகளில் இரண்டாம் தவணை போடுபவர்களுக்கு மட்டும் முன்னுரிமை
இந்தியாவில் இதுவரை 39 கோடி கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன
Background
தனியார் மையங்களில் தடுப்பூசியின் கொள்முதல் மற்றும் நிர்வாகம் குறித்து தினசரி ஆய்வை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தனியார் மையங்கள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு இடையே ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் அதனைத் தடுப்படுப்பதற்கு விரைவான மற்றும் ஆக்கபூர்வமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறும் மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -