Tamil Nadu Coronavirus LIVE: தமிழ்நாட்டில் இன்று 2,913 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு குப்பியில் இருந்து 11 முதல் 12 நபர்கள் வரை என கூடுதலாக 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 6 லட்சம் டோஸ் வரை தடுப்பூசி வீணடிக்கப்பட்டுள்ளது. மருந்து குப்பியில் 16 முதல் 24 சதவீதம் வரை கூடுதலாக இருக்கும் மருந்தை வீணாக்காமல் தடுப்பூசி போடப்படுகிறது - மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கடந்த 5ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களுக்கு ஒரே மாதிரயான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதுப்பு விகிதம் அதிகரித்துள்ளது. சேலத்தில் அதிகபட்சமாக ஒரு வார பாதிப்புகள் 37% சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
பொதுமக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை.
தமிழ்நாட்டில் ஜூலை 19ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான தடை தொடர்ந்து விதிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கு ஜூலை 12ஆம் தேதிக்குள் 15.85 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் ஒன்றிய அரசு வழங்கயிருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஐரோப்பிய யூனியனின் 15 நாடுகள் அங்கீகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி பகுதிகளில், மார்ச் 31-ம் தேதிக்கு முன் முதல் தவணை Covishield தடுப்பூசி போட்டுக்கொண்ட 65 வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு இரண்டாவது டோஸ் போடுவதில் காலதாமதம் ஏற்படாமலிருக்கும் பொருட்டும் அவர்களுக்கு இன்று (ஜூலை 10) தடுப்பூசி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், " கோயம்புத்தூர் மாநகராட்சியில் கொரோளா நோயக்கிருமியின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு அதற்கான தடுப்பு நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. மார்ச் 31-ம் தேதிக்கு முன் முதல் தவணை Covishield தடுப்பூசி போட்டுக்கொண்ட 65 வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு இரண்டாவது டோஸ் போடுவதில் காலதாமதம் ஏற்படாமலிருக்கும் பொருட்டும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி ஐந்து மண்டலங்களிலும் மேற்குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் 10.07.2021 அன்று இரண்டாவது டோஸ் Covishield தடுப்பூசியாவது கீழ்கண்ட இடங்களில் சிறப்பு முகாம் அமைந்து ஒரு மண்டலத்திற்கு 200 நபர்களுக்கு போடப்படுகிறது
கிழக்கு மண்டலம் - ராமசெட்டி பள்ளி, வார்டு எண் 37
மேற்கு மண்டலம்அம்மணி அம்மாஸ் பள்ளி, வார்டு எண்.23
வடக்கு மண்டலம் - அரசு மேல்நிலைப்பள்ளி, வார்டு எண்.46
தெற்கு மண்டலம் - மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, வார்டு எண்.78
மத்திய மண்டலம் - சித்தாபுதூர் பள்ளி, வார்டு எண். 52
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை 38.54 கோடிக்கும் அதிகமான (38,54,01,150) கொரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 36,80,68,124 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 1.73 கோடி (1,73,33,026) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்குமாறு மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்த உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் புதிதாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், 1,206 பேர் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தனர்.
திரிபுரா மாவட்டத்தில் மரபணு வரிசைப்படுத்தப்பட்ட 150 கொரோனா வைரஸ் மாதிரிகளில், 90 விழுக்காடு புதிய உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று எனக் கண்டறியப்பட்டுள்ளது.
பாலூட்டும் தாய்மார்கள், கொரோனா தொற்றுக்கு எதிராக எந்த தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதன் காரணமாக தாய்க்கு உருவாகும் எதிர் பொருள்( anti-bodies) , தாய்பாலூட்டும் போது குழந்தைக்கும் சென்று பயனுள்ளதாக இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்கள் பிரிவு தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்தார்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,800 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏழு நாள் சராசரி பாதிப்பு எண்ணிக்கை (7 day Moving average) 17900 ஆக அதிகரித்துள்ளது.இது, கடந்த வார பாதிப்பு எண்ணிக்கையை விட 65% கூடுதலாகும்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்த்சில் 69 கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்துனர். செங்கல்பட்டு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா இறப்பு எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது.
Background
நாடு முழுவதும் ஆக்ஸிஜன் ஆலைகள் அதிகரிப்பு மற்றும் முன்னேற்ற பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆலைகள் விரைவில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், இதற்காக மாநிலங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -