தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கொரோனா தொற்றால், கடந்த 24 மணி நேரத்தில் 1,830 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,516 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனார். குணமடைந்தார் விகிதம் 97.69% ஆக அதிகரித்துள்ளது,       

  


மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்துக்கும் (25,44,870) அதிகமாக உயர்ந்துள்ளது. அதாவது, மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் (7 கோடி) இதுவரை 4%க்கும் குறைவானோருக்கு மட்டுமே பரிசோதனை கருவிகள் மூலம் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இந்த எண்ணிக்கை விகிதம் 8 சதவிகிதமாகவும்,மகராஷ்டிராவில் இந்த எண்ணிக்கை விகிதம் 5 சதவிகிதமாகவும் உள்ளன. 




இருப்பினும், நோய் எதிர்ப்புக் கிருமிகளை அடிப்படையாகக் கொண்டு ஐ.சி.எம்.ஆர். நடத்திய செரோ-கண்காணிப்பு ஆய்வில், கணக்கெடுப்பு நடத்தியவர்களில் 68 சதவீதம் பேருக்கு சார்ஸ்-சி.ஓ.வி.-2 (SARS-Cov-2)பாதிப்பு இருந்திருப்பதற்கான  ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஐ.சி.எம்.ஆர் 2021 ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் கொரோனா நோய்த் தொற்று குறித்த நான்காவது செரோ கணக்கெடுப்பை நடத்தியது. சென்னை, கோயம்பத்தூர், திருவண்ணாமலை என நாடு முழுவதிலும் உள்ள 70 மாவட்டங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 


முதலாவது, செரோ ஆய்வில் பரிசோதிக்கப்பட்ட மக்களில் 0.73 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா நோய்த்தொற்று  கண்டறியப்பட்டது. இரண்டாவது, செரோ ஆய்வில் இந்த எண்ணிக்கை 6.6% ஆகவும், மூன்றாவது ஆய்வில் (2020, 18 டிசம்பர் முதல் 2021 6 ஜனவரி) இந்த எண்ணிக்கை 24.1% ஆகவும் இருந்தது.   


அதாவது, தமிழ்நாட்டில் மேலும் 3 கோடி மக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. மேலும், ஒரு நிலப்பரப்பில் குறிப்பிட்ட சதவிகித மக்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் மட்டுமே சமூகத் தடுப்பாற்றலை (Herd immunity) பெற்றுவிட முடியாது என்று உலக சுகாதார அமைப்பு பலமுறை வலியுறித்தியுள்ளது. அறிவியல் ரீதியாக குடிமக்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து விடுபடலாம் என்றும் தெரிவித்தது. 




தமிழ்நாட்டில் தற்போது வரை தடுப்பூசி பயனாளிகளில் 28.9 சதவிகிதம் பேருக்கு மட்டுமே முதற்கட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 6% பேருக்கு மட்டுமே இரண்டு கட்ட தடுப்பூசி டோஸ்களை போட்டுக் கொண்டுள்ளனர். தேசிய சராசரி எண்ணிக்கை விகிதத்தை விட இதுமிகவும் குறைவானதாகும். அண்டை மாநிலமான கேரளாவில் இந்த எண்ணிக்கை 46%,19% என்றளவில் உள்ளது. எனவே, தடுப்பூசி நிர்வகிக்கும் வேகத்தை எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே மூன்றாம் கட்ட அலையை தமிழ்நாடு தவிர்க்க முடியும் என்று நம்பப்படுகிறது.  


 



தமிழ்நாடு தொற்று பரிசோதனை - தொற்று உறுதி விகிதம் 


கொரோனாவிக்குப் பிந்தைய சிக்கல்கள்:  தமிழ்நாட்டில் தற்போது வரை 24 லட்சத்துக்கும் (24,86,192) அதிகமானோர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குனமடைந்துள்ளனர். தொற்றில் இருந்து குணமடைந்து 6 மாதங்கள் வரை உடல் சோர்வு மூச்சு விடுதலில் சிரமம் உள்ளிட்ட உபாதைகளை குணமடைந்த நோயாளிகள் தொடர்ந்து எதிர்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பல நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு வாழ்நாள் நோயாகவும் மாறியுள்ளது. முன்னதாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 4ல் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்கு பிந்தைய உபாதைகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.  எனவே, கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் தடுப்பூசிகளோடு நின்றுவிடாமல், வாழ்நாள் கொரோனா பாதிப்புக்கு தேவையான மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய சூழல் உள்ள்ளது.