திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 6 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33233-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று  மட்டும்  7 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 32533-ஆக அதிகரித்துள்ளது.  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 650 இருக்கிறது. இன்று கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல். தற்போதுவரை 50 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.




அதே போல் தேனி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு  நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43606 -ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 43073-ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரையில் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 521 ஆக இருக்கிறது. இன்றுவரை  12 நபர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் தேனி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 




அதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 2 நபருக்கு  நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30327 -ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் நோய்தொற்றிலிருந்து குணமடைந்து 4 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 29882-ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 418 ஆக இருக்கிறது. இன்று  27 நபர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் தேனி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 





சென்ற மாதம் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையில் தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் தினசரி 5க்கும் கீழ் உள்ளது. நோய் தொற்றால் உயிரிழப்புகளும் இல்லை என்பது ஆறுதல்.

 

 

மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,