கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1480 ஆக உள்ளது. மேலும் 146 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை சேலம் மாவட்டத்தில் 86171 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 89442 ஆக உயர்வு. மாவட்டத்தில் 1784 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் இரண்டாம் நாளாக இன்று தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தினால் மக்களுக்கு செலுத்தப்படவில்லை.இதுவரை சேலம் மாவட்டத்தில் 8,05,845 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கடந்த வாரம் வரை தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்றாக இருந்தது. அதனால், இரண்டு மாதங்களாக சிறுசிறு தளர்வுகள் மட்டுமே அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்தது.

மாவட்டத்தில் தொற்று விகிதம் குறைந்து வந்ததால் இன்று முதல் பிற மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் சேலம் மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 85 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று மூன்று பேர் உயிரிழப்பு. மேலும் 109 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 869 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய்தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 82 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. நோயிலிருந்து குணமடைந்த 128 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 799 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.