திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை மாவட்டத்தில் 49 ஆயிரத்து 990 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 48ஆயிரத்து 179 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 127 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றால் யாரும் இறக்கவில்லை . இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 604 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் , தண்டரம்பட்டு , ஆரணி , செய்யார், வந்தவாசி , போளுர் , உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 1207 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக படிபடியாக கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் மருத்துவமனை நிலைப்பாடுகள் கூறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் மற்றும் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது