வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகளின் ஆரம்ப கட்ட ஆய்வில், டெல்டா அல்லது பீட்டா வேரியன்ட்களுடன் ஒப்பிடும்போது ஓமைக்ரான் மாறுபாடு ஏற்கனவே தொற்று ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் என்று கூறுகிறது. நாட்டின் சுகாதார அமைப்பால் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த கண்டுபிடிப்புகள், முந்தைய வேரியன்ட்களை விட நோய் எதிர்ப்பு சக்தியைத் மிஞ்சும் ஓமிக்ரானின் திறனைப் பற்றிய முதல் தொற்றுநோயியல் ஆதாரம் வெளியிடப்பட்டது. அதற்கான ஆராய்ச்சி தொடர்பான ஆவணங்களை மருத்துவ ப்ரிபிரிண்ட் சர்வரில் பதிவேற்றப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. நவம்பர் 27 ஆம் தேதி வரை கொரோனா பாதித்த 2.8 மில்லியன் நபர்களில் 35,670 பேருக்கு மீண்டும் தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. 90 நாட்கள் இடைவெளியில் யாருக்கேனும் மீண்டும் கொரோனா பாசிட்டிவ் என்று பரிசோதனை ரிசல்ட் வந்தால், அவர்கள் மீண்டும் நோய்த்தொற்று உள்ளவர்களாகக் கருதப்பட்டனர்.
"மூன்று அலைகளிலும் முதன்மை நோய்த்தொற்றுகள் ஏற்பட்ட நபர்களில் அதிகமானோருக்கு சமீபத்தில் மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை டெல்டா அலையின் தொற்றுநோயைக் கொண்டுள்ளன" என்று தென்னாப்பிரிக்காவின் DSI-NRF மையத்தின் இயக்குநர் ஜூலியட் புல்லியம் ட்வீட் செய்துள்ளார். தனிநபர்களின் தடுப்பூசி நிலையைப் பற்றிய தகவல்கள் ஆசிரியர்களிடம் இல்லை என்றும் அதனால் தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை Omicron எந்த அளவிற்கு தவிர்க்கிறது என்பதை மதிப்பிட முடியவில்லை என்றும் புல்லியம் எச்சரித்தார். இது குறித்து அடுத்தடுத்து ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிகிறது."ஓமைக்ரான் நோய்த்தொற்றுடன் தொடர்புடைய நோயின் தீவிரம் குறித்த தரவுகள் அவசரமாக தேவைப்படுகின்றன, இதில் முந்தைய நோய்த்தொற்றின் வரலாற்றைக் கொண்ட நபர்கள் உட்பட," என்று அவர் கூறினார். "இந்த பகுப்பாய்வு மிகவும் கவலையளிக்கிறது, முந்தைய நோய்த்தொற்றுகளிலிருந்து இது நோய் எதிர்ப்பு சக்தியை தாண்டி தாக்குவதற்கான வீரியத்தில் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. இவை அனைத்தும் இன்னும் ஒரு 'தவறான எச்சரிக்கையாக' இருக்கலாம்? அது அவ்வபோது குறைவாகவும் தெரிகிறது," என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
முன்னதாக, தென்னாப்பிரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானி அன்னே வான் கோட்பெர்க், தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் நிபுணரான அவர், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை முன்னரே அறிவித்தார், ஆனால் கடுமையான விளைவுகளுக்கு எதிராக தடுப்பூசிகள் மட்டுமே இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். "நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தடுப்பூசிகள் இன்னும் கடுமையான நோய்களிலிருந்து பாதுகாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தடுப்பூசிகள் எப்பொழுதும் தீவிர நோய், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றிற்கு எதிராக பாதுகாக்கப்படுகின்றன," என்று அவர் உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்கா பிராந்தியத்துடன் ஒரு செய்தி மாநாட்டில் கூறினார்.
WHO வல்லுநர்கள் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பயணத் தடைகளை மறுபரிசீலனை செய்வதற்கான அழைப்புகளை மீண்டும் வலியுறுத்தினர், ஓமைக்ரான் இப்போது கிட்டத்தட்ட 24 நாடுகளில் பதிவாகியுள்ளது என கூறப்படுகிறது. தென் ஆப்ரிக்கா மற்றும் போட்ஸ்வானா ஆகியவை இந்த புதிய மாறுபாட்டைக் கண்டறிந்தன. இதன் தோற்றம் எங்கிருந்து இருந்திருக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை என்று நிபுணர் அம்ப்ரோஸ் தலிசுனா கூறினார். நவம்பர் நடுப்பகுதியில், தென்னாப்பிரிக்காவில் ஒரு நாளைக்கு சுமார் 300 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. புதன்கிழமை நாட்டில் 8,561 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன, அதற்கு முந்தைய நாள் 4,373 ஆகவும், திங்களன்று 2,273 ஆகவும் இருந்தது. இப்படி தினம் தினம் இரட்டிப்பாகிக்கொண்டே போகும் அதன் தீவிரம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.