சர்வதேச அளவில் வரும் பயணிகளின் ராண்டம் கொரோனா சோதனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது, விமானப் போக்குவரத்து அமைச்சகம், விமானக் குழு உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்ட பயணிகளை விமான நிலையத்தில் உள்ள சோதனை மையத்திற்கு கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளது.
சீனா மற்றும் உலகின் பிற பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக, சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீத பயணிகளை இன்று காலை முதல் ராண்டம் கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. விமான நிலைய அதிகாரிகள் அந்தந்த விமான நிலையங்களுக்கு சர்வதேச வருகை தரும் பயணிகளின் ராண்டம் சோதனைக்கு வசதியாக தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வர் என கூறப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA க்கு இது தொடர்பாக தகவல் அனுப்பப்பட்டது மற்றும் நகல்கள் அனைத்து வணிக விமான நிறுவனங்கள், விமான நிலைய ஆபரேட்டர்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (UTs) ஆகியவற்றிற்கும் அனுப்பப்பட்டுள்ளது.
ராண்டம் சோதனைக்குப் பிறகு, பயணிகளின் தொடர்பு விவரங்களை விமான நிலைய சுகாதார அதிகாரிகள் (APHOக்கள்), விமான நிலைய அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். APHO களுக்கு முறையாக பில்களை சமர்ப்பித்தால், பரிசோதனைக்கான செலவு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் திருப்பியளிக்கப்படும். சோதனை செய்யப்படும் பயணிகளின் முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களின் மாதிரிகள் நியமிக்கப்பட்ட INSACOG ஆய்வகத்தில் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட வேண்டும்" என்று தகவல் தொடர்பு தெரிவித்துள்ளது.
மும்பை விமான நிலையம், ஒரு அறிக்கையில், கொரோனா வைரஸ் சோதனை செயல்முறைக்கு ஆறு பதிவு கவுன்டர்கள் மற்றும் மூன்று பரிசோதனை சாவடிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மும்பை போலவே டெல்லி விமான நிலையத்திலும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான ஆர்டி-பிசிஆர் சோதனை வசதி சர்வதேச வருகை மையத்தில் சுகாதார பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும், கட்டணம் ஏதும் செலுத்த வேண்டாம். 2% வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், அனைத்து பயணிகளுக்கும் உடல் வெப்பத்தை கட்டாயம் சோதனை செய்ய வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.