15 முதல் 18 வயது வரையிலான பிள்ளைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி மிக அண்மையில் தொடங்கியது. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு அதன் பக்கவிளைவை எதிர்கொள்ள கூடவே வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் இந்த மாத்திரைகளைத் தரத் தேவையில்லை எனக் கூறியிருக்கிறது கோவாக்சினைத் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம். 







நிறுவனத்தின் விளக்கத்தில்,’முதற்கட்டமாக 30000 பேருக்கு நாங்கள் தடுப்பூசியை பரிசோதனை செய்தோம். அவர்களில் 10 முதல் 20 பேர் வரை மட்டுமே தடுப்பூசியின் பக்கவிளைவுகள் தென்பட்டன. அதுவும் மிகவும் லேசான பக்கவிளைவுகளே. இரண்டு நாட்களில் அதுவும் குணமானது. 






பாரத் பயோடெக் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘குறிப்பிட்ட சிலருக்கு மருத்துவர்கள் பாராசிட்டமால் பரிந்துரைக்கிறார்கள். அப்படி பரிந்துரைக்காத சூழலில் பாராசிட்டமால் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. 2-18 வயது வரையிலான குழந்தைகள், மற்றும் பெரியவர்களில் மேற்கொள்ள ஆய்வின் அடிப்படையிலேயே இதனை நாங்கள் சொல்கிறோம்’ என அவர் கூறினார்.