கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் கோவிஷூல்டு தடுப்பூசிகளைக் கலந்து உபயோகிப்பது தவறு என்றும் இது நிச்சயம் மக்களுக்குப் பாதிப்பினை தான் ஏற்படுத்தும் என சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியா மற்றும் மேக்மா நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் சைரஸ் பூனவல்லா தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றின் தாக்கம் மக்களைச் சொல்ல முடியாத அளவிற்கு பல்வேறு இன்னல்களை சந்திக்க வைத்தது. இந்தியாவில் முதல் அலையினை விட இரண்டாவது அலையின் தாக்கத்தினால் பல உயிர்கள் பலியானது. இந்நிலையில் தான் இதனைக்கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷூல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டது. இதோடு தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, போன்ற பல்வேறு தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளது.  



இந்நிலையில் தான் கடந்த சில நாள்களுக்கு முன்பாக, எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் கோவாக்சின் மற்றும் கோவிஷூல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளைக் கலந்து உபயோகித்தால் நீண்ட காலத்திற்கு  நோய் எதிர்ப்புச் சக்தியினை அதிகரிக்கும் என தெரிவித்து வருகின்றனர். இதுக்குறித்து உலகளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  இந்நிலையில் தான் இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறையின் கீழ் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று கோவாக்சின் மற்றும் கோவிஷூல்டு காம்போ குறித்து ஆய்வு செய்வதற்காக முன்மொழியப்பட்டது. இதனையடுத்து வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு மருந்துகளின் கலவைப்பற்றிய ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



இந்தச் சூழலில்தான் புனேவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியா மற்றும் மேக்மா நிதி நிறுவனங்களின் தலைவர் சைரஸ் பூனவல்லா, கோவாக்சின் மற்றும் கோவிஷூல்டு தடுப்புசிகளைக் கலந்து உபயோகிப்பது தவறு என்று தெரிவித்துள்ளார். மேலும் இவ்விரு டோஸ்களையும் கலந்து உபயோகிக்கவேண்டிய அவசியம்,  தற்போது இல்லை எனவும், ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் இரு நிறுவனங்களையும் தான் பழி கூறுவார்கள் என்று தெரிவித்துள்ளார். எனவே இதுத்தொடர்பாக எந்த ஆய்வுகள் நடத்தத் தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.


குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 120 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளதாகவும், அதே நேரத்தில் கொரோனா நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 585-ஆக உள்ளது