Covid 19 Vaccine Mixing: ’கோவிஷீல்ட் கோவேக்சின் கலந்துபோட்டால் அதிகமான பலன்’ : கொரோனாவுக்கு எதிரா ஸ்ட்ராங் பாதுகாப்பு - ICMR

டோஸ் மாற்றிச் செலுத்துவதால் உடலில் என்னமாதிரியான மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பதை அறிய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் ஆய்வு மேற்கொண்டுவந்தது

Continues below advertisement

முதல் டோஸ் கோவிஷீல்ட் மற்றும் இரண்டாவது டோஸ் கோவாக்சின் என கலப்பு தடுப்பூசி செலுத்துவது கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.

Continues below advertisement

அடினோ வைரஸ் நிரம்பிய கோவிஷீல்ட் செலுத்தப்பட்ட பிறகு செயலிழக்கச் செய்யப்பட்ட வைரஸினை தடுப்பூசியாகச் செலுத்துவது பாதுகாப்பானது மட்டுமல்ல எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஐ.சி.எம்.ஆர்., கொரோனா தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது,

நோய் எதிர்ப்புக் கிருமிகளை அடிப்படையாகக் கொண்டு ஐ.சி.எம்.ஆர். நடத்திய செரோ-கண்காணிப்பு ஆய்வில், தமிழகத்தின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று தெரியவதுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்தியாவின் 70 மாவட்டங்களில் அண்மையில் தேசிய செரோ ஆய்வை மேற்கொண்டது. தேசிய அளவிலான நோய்த்தொற்று பரவல் குறித்த தரவுகள் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில், மாநிலங்கள் அளவிலான  ஆய்வு முடிவுகளை ஐசிஎம்ஆர் நேற்று வெளியிட்டது. 

 

ஆய்வின் முடிவில், " அதிகாரப்பூர்வ கோவிட்-19 பரவல் எண்ணிக்கையை விட 33 மடங்கு வரை அதிக பாதிப்புகள் இந்தியாவில் ஏற்பட்டிருக்கலாம். பீகார் மாநிலத்தில் 134 மடங்காகவும், உத்தர பிரதேச மாநிலத்தில் 100 மடங்காகவும், தமிழகத்தில் 25 மடங்காகவும், கேரளாவில் 6 மடங்காகவும் உண்மையான பாதிப்புகள் இருக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதாவது, தமிழ்நாட்டில் சராசரியாக 25 கொரோனா நோயாளிகளில் ஒருவர் மட்டுமே அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளனர். எனவே, தமிழ்நாட்டில் ஏற்கனவே 5 கோடிக்கும் (மொத்த மக்கள்தொகையில் 65%) அதிகமானோர் (அதிகாரப்பூர்வ எண்ணிக்கை * 25 மடங்கு) கொரோனா  தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்புக் கிருமிகளை கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் மேலும் 3 கோடி மக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் “பரிசோதித்தல், தடம் அறிதல், சிகிச்சை அளித்தல்” என்ற உத்தி  மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில்,  இதுவரை சுமார் 3.6 (3,61,00,234) கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது . அன்றாட சோதனைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதால், இதுவரை மொத்தம் 3,69,71,334 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தற்போது, மாநிலத்தில்  மொத்தம் 279 ஆய்வுக் கூடங்கள் உள்ளன. 69 ஆய்வுக்கூடங்கள் அரசுப் பிரிவிலும், 210 தனியார் ஆய்வுக் கூடங்களும் உள்ளன.

தமிழ்நாட்டில் நிகழ்நேர RT PCR அடிப்படையிலான பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. கேரளா மாநிலத்தின் மொத்த பரிசோதனை எண்ணிக்கையில், 35% மட்டுமே RT PCR அடிப்படையிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேசியளவில் RT PCR சோதனையின் விழுக்காடு 48% ஆக உள்ளது.

 

கேரளாவை விட தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மக்கள் தொகைக்கு ஏற்ப (Relative to Population) தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. உதாரணமாக, 10 லட்சம் மக்கள் தொகையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை கேரளா, டெல்லி, கர்நாடகவை  ஆகிய மாநிலங்களை விட தமிழகத்தில் குறைந்து காணப்படுகிறது.      

Also Read: ’மலையாள சினிமாவின் மகேந்திர பாகுபலி..உலகநாயகனின் கனவுநாயகன்..' : ஹேப்பி பர்த்டே ஃபாஃபா..!

மேலும், மாநிலத்தின் அநேக கொரோனா பரிசோதனைகள் சென்னை, கோயம்பத்தூர், திருச்சி போன்ற நகர்ப்புறங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. கிராமப்புற மாவட்டங்களில் கூடுதலான மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. 

இதற்கிடையேதான் தற்போது தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளும் வெளியாகியிருக்கின்றது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola