கொரோனா மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் லதா மங்கேஷ்கர் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சையில் உள்ளதாக அவரது அலுவலகச் செய்திக் குறிப்புத் தெரிவித்துள்ளது. மேலும் அவர் உடல்நிலை குறித்து எந்தவிதமான தவறான செய்திகளுக்கும் இடம் கொடுக்க வேண்டாம் என அந்தச் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. 






இதையடுத்து மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த ஒருவார காலமாக சிகிச்சை பெற்று வரும் லதா மங்கேஷ்கருக்காக அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


முன்னதாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானது,


இந்திய முழுவதும் கொரோனா பாதிப்பு வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா,கேரளா உள்ளிட்ட இடங்களில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. 


இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “மிகவும் லேசான அறிகுறிகளுடன் இன்று எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்காரணமாக நான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.