கரூரில் இன்று புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு 23 நபர்களும் கரூர் உள்ள காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 12 ஆக உள்ளது. 




கரூர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர்கள் மற்றும் வீடுதிரும்பிய எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் எண்ணிக்கை நாள்தோறும் சுகாதாரத்துறையில் அறிவிப்புகள் மூலம் வந்து கொண்டு இருக்கிறது. கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இதுவரை மொத்த நபர்களின் எண்ணிக்கை மற்றும் வீடு திரும்ப வரும் எண்ணிக்கை, இறப்பு விகிதம் உள்ளிட்ட வரை பின் வரும் பதிவுகளில் காணலாம் :- 




கரூர் மாவட்டத்தில் 22,328 நபர்கள் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை சிகிச்சை பெற்று வந்துள்ளனர். கொரோனா தொற்று  சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 21,696 நபர்கள்.
தற்போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 285 நபர்களும் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் மொத்த விபரம் 347 நபர்கள்.


கரூரில் இருந்து வெளியூர் செல்ல அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் நீண்ட நாள் ஆன்மீக பயணம் மற்றும் உறவினர் வீட்டிற்கு செல்லாதவர்கள் தற்போது ஆர்வத்துடன் நாள்தோறும் பேருந்து பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் இந்த ஊரடங்கு தளர்வுகளை மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென மாவட்ட நிர்வாகம் நாள்தோறும் வேண்டுகோள் விடுத்து வருகிறது.




கரூர் மாவட்டத்தில் இன்று தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சிறப்பு முகாம் மூலம் நடைபெற்றுவந்த தடுப்பூசி முகாம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாளை தடுப்பூசி முகாம் போடுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வராத நிலையில் நாளையும் தடுப்பூசி போடுவார்கள் அல்லது மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் காத்திருக்க வேண்டுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதைத் தொடர்ந்து இன்று 10க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகள் மற்றும் பேரூராட்சிகளில் காய்ச்சல் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. இந்தக் காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர்.




கரூர் மாவட்டத்தில் நாள்தோறும்  கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதைத்தொடர்ந்து வீடுதிரும்புபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே  வருவதால் பொதுமக்கள் இந்த ஊரடங்கு தளர்வுகளை மிகவும் எச்சரிக்கையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் நாள்தோறும் விடுத்து வருகின்றனர் . 


தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து  16 ஆயிரத்து 115 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 34 ஆயிரத்து 408 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 174 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 174 ஆக உள்ளது. கோவை 338, ஈரோடு 215, சேலம் 180, திருப்பூர் 169, தஞ்சாவூர் 174, செங்கல்பட்டு 148, நாமக்கல் 88, திருச்சி 116, திருவள்ளூர் 85, கடலூர் 90, திருவண்ணாமலை 84, கிருஷ்ணகிரி 53, நீலகிரி 99, கள்ளக்குறிச்சி 72, கன்னியாகுமரி 45, மதுரை 39, தருமபுரி 65, விழுப்புரம் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.