கொரோனா வைரசின் புதிய மாறுபாடான கப்பா வைரஸ் மக்களுக்கு அதிகளவில் பாதிப்பினை ஏற்படுத்தாது எனவும், கோவாக்சின் மற்றும் கோவிஷூல்டு தடுப்பூசிகளே இதன் தாக்கத்தின் கட்டுப்படுத்துகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


இந்தியா முழுவதும் கடந்த ஓராண்டிற்கு மேலாக கொரோனா தொற்றின் தாக்கம் மக்களைப் பாடாய்ப் படுத்தி வருகிறது. வைரஸின் தாக்கம் சற்று குறைந்தப்பொழுதெல்லாம் நிம்மதி பெருமூச்சு விட்ட மக்களுக்கு பேரதிர்ச்சியாய் புதிய உருமாற்றத்துடன்  கொரோனா  பெருந்தொற்று மக்களைப் பாதித்து வருகிறது. குறிப்பாக  கொரோனா என்ற பெயருடன் அறியப்பட்ட இந்த பெருந்தொற்று தற்பொழுது பல்வேறு உருமாற்றம் அடைந்த நிலையில் இந்த வைரசுக்கு டெல்டா, ஆல்பா மற்றும் கப்பா வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.  இந்தியாவில் பரவி வரும் கப்பா வகை வைரஸ், டெல்டா வகை கொரோனாவின் பண்புகளைக்கொண்டுள்ளன. குறிப்பாக டெல்டா ப்ளஸ் வைரசின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கொரோனா வைரசின் புதிய மாறுபாடான கப்பா வைரசினால் இரண்டு பேர் பாதிக்கபட்டிருந்ததாாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவினைப் பொருத்தவரை உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பேருக்கு கப்பா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.


முன்னதாக லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெற்றவர்களின் 109 பேரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்தப்பொழுது இரண்டு பேருக்கு கப்பா  வைரஸ் பரவல் உறுதியாகியுள்ளதாகவும், மீதமுள்ள 107 பேருக்கு டெல்டா ப்ளஸ் வைரசும் கண்டறிப்பட்டுள்ளதாக ஆய்வுகள் முடிவுகள்  தெரிவித்தன.






இந்நிலையில் வைரசின் புதிய மாறுபாடான கப்பா வைரசின் தாக்கம் குறித்து அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று. கொரோனாவின் மாறுபட்ட கப்பா வைரஸ் என்பது புதிய மாறுபாடு இல்லை எனவும் பொதுவாக B.1.617.1 என்று அழைக்கப்படுகிறது. மேலும்  EE484Q மற்றும் L452R என்ற இரண்டு வகையான புரோட்டின் உருமாற்றம் ஏற்பட்ட காரணத்தினால் ஏற்பட்டது என கூறப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா புதிய உருமாற்றமான கப்பா வைரஸ் கடந்த 2020 அக்டோபர் மாதம் கண்டறிப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் டெல்டா வகை கொரோனா வைரஸினைப் போன்ற பாதிப்பினை ஏற்படுத்துமா? என்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் கூறப்படுகிறது.


குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் காணப்படும் கப்பா வைரஸ் குறித்து கவலைப்படத்தேவையில்லை எனவும், இது வெறும் கொரோனா  வைரசின் மாறுபாடுதான் எனக்கூறப்படுகிறது. மேலும் இம்மாநிலத்தின் சுகாதராத்துறையின் கூடுதல் தலைமைச்செயலாளர், அமித் மோகன் பிரசாத் கூறுகையில், இந்த வகையாக கொரோனா வைரசிற்கு சிகிச்சைகள் அளிப்பது சாத்தியமாகும் என்பதால் எந்தவிதப்பாதிப்பும் இல்லை என தெரிவித்தார். இருப்பினும், புதிய புதிய கொரோனா வைரசின் மாறுபாடு மக்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்துகிறது. எனவே கப்பா வைரசும் பாதிப்பினை ஏற்படுத்துமா? என்ற அச்சத்தினைப்போக்கும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில், பாரத் பயோடெக்க நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிவைரசுக்கு எதிராக செயல்படுவதாக தெரிவிக்கின்றது. மேலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடந்த ஜூன் மாதத்தில் நடத்திய ஆய்விலும், சீரம் நிறுவனத்தின் கோவிஷூல்டு தடுப்பூசியும் கப்பா வைரசிலிருந்து மக்களைக்காத்து வருவதாக தெரியவந்துள்ளது.






கொரோனாவிற்கு எதிராகப்போராட தடுப்பூசி ஒன்று மட்டும் தீர்வாக  அமையாது. ஒவ்வொரு நாளும் மாறுபடும் கொரோனா வைரசின் தாக்கத்திலிருந்து நம்மைப்பாதுகாத்துக்கொள்வதற்கு தனி மனித இடைவெளி, முகக்கவசத்துடன் பாதுகாப்போடு இருப்பது என்பது அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றாகிவிட்டது.