கரூரில் இன்று புதிதாக 24 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி, அதேபோல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் 11 நபர்கள். அதேபோல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறப்பு விகிதம் இன்று எதுவுமில்லை. கடந்த 5 நாட்களாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 நபர்களுக்குள் இருக்கிறது. அதே போல் வீடு திரும்புவோர் எண்ணிக்கை 15 நபர்களுக்கு இருக்கிறது. 




கரூர் மாவட்டத்தில் இன்று பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் மூலம் 4000 பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. நடைபெற்ற சிறப்பு முகாம்களில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் ஆர்வமுடன் வந்து தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து, இன்று 20க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சிகளில் காய்ச்சல் முகாம் நடைபெற்றது. இந்த காய்ச்சல் முகாமில் கலந்து கொள்ள வரும் பொது மக்கள் முகக் கவசம் அணிந்து ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கரூர் மாவட்டத்தில் கொரோனா  தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.




கரூரில் இதுவரை கொரோனா தொற்று பாதித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் மற்றும் இறப்பு விகிதம் குறித்து தற்போது காணலாம் :- 


கரூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்கள் 22,352 நபர்களாகவும், மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியவர்கள் 21,707 நபர்களாகவும், தற்போது மாவட்டத்தில் சிகிச்சையில் உள்ளவர்கள் 298 நபர்களாகவும், இதுவரை மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார் 347 நபர்களாக உள்ளனர்.




இன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட பொதுமக்கள் நடமாட்டம் மாவட்டத்தில் அதிக அளவில் இருந்தது. இருந்தபோதிலும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேபோல் இன்று முகூர்த்த நாள் என்பதால் பல்வேறு ஆலயங்களில் அதிகாலை முதலே திருமணங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 





கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 5 நாட்களாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 30-க்கும் மிகாமல் இருந்து வருகிறது. அதேபோல் கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மாவட்டத்தில் சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசிகள் போடப்பட நிலையில் இன்று ஒரே நாளில் 10 க்கு மேற்பட்ட இடங்களில் 4000 தடுப்பூசிகள் போடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. கரூரில் இருந்து வெளியூர் செல்ல அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் நீண்ட நாள் ஆன்மீக பயணம் மற்றும் உறவினர் வீட்டிற்கு செல்லாதவர்கள் தற்போது ஆர்வத்துடன் நாள்தோறும் பேருந்து பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.




தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முக கவசம் அடைவது ,சமூக இடைவெளி கடைப்பிடிப்பது மற்றும் சனிடைசர் மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் உள்ளிட்ட விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென மாவட்ட சுகாதாரத் துறையும், மாவட்ட நிர்வாகமும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.