கரூரில் உள்ள பல பள்ளிகளில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது . அதில் முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா சிறப்பு தடுப்பூசி ஏராளமான கரூர் மக்கள் மக்கள் போட்டுக் கொண்டனர்.


மீண்டும் கொரோனா அச்சத்தில் மக்கள்.கரூர் தாந்தோணிமலை பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பசுபதிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, புலியூர் கவுண்டம்பாளையம் தாந்தோணி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நேற்று கோரோனோ 4-வது அலை பரவுவதை தடுக்கும் வகையில் நடைபெற்றுவரும் இருபத்தி ஒன்பதாவது மாபெரும் கோரோனோ சிறப்பு தடுப்பூசி முகாமினை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். 




 


அப்போது அவர் தெரிவித்ததாவது, "தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சம் கொரோனோ சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்ததையொட்டி, நேற்று இருபத்தி ஒன்பதாவது மாபெரும் கோரோனோ சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் 1,897 இடங்களில் நடைபெறுகின்றன. நமது மாவட்டத்தை பொறுத்தவரை 11 லட்சத்து 58 ஆயிரத்து 303 மக்கள் தொகையில் கடந்த 6-ஆம் தேதி வரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 8 லட்சத்தை 17 ஆயிரத்து 446 பேர். இது 96 சதவீதமாகும். 




 


சிறப்பு ஏற்பாடு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 7   லட்சத்து 690 பேர் இது  82 சதவீதமாகும் இந்த முகாமில் 607 செவிலியர்கள், 1214 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்களும், 607 சுய உதவிக்குழுவினர்களும் மற்றும் 1214 ஆசிரியர்களும் பணியமர்த்தப்பட்டு முகாம் நடைபெற சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


 


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X




மேலும், நொய்யல் ஈவேரா பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, வேட்டமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி, தவிட்டுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மெகா கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அனிதா தலைமையில் சுகாதார செவிலியர் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டனர். கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று முகாமில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு தடுப்பூசி போட்டனர்.