கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி வந்தது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்தது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். ஊரடங்கு மற்றும் அதிக பரிசோதனை எதிரொலியாக தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை மாவட்டம் தமிழக அளவில் இரண்டாம் இடத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் ஊரடங்கு எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைய தொடங்கியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1500 - ஆக இருந்தது. ஊரடங்கும் எதிரொலியாக தற்போது கணிசமாக குறைந்தது நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
தற்போது மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் ஜூன் 28- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும். மூன்று வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் 50 சதவிகித இருக்கைகளுடன் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோவில் பயணிக்க இ-பதிவு அவசியமில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 103, கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 5. குணமடைந்து ஒரே நாளில் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 288. தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் 441. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவு குணமடைந்து வீடு திரும்புபவர்களின் தற்போது படுக்கைகள் காலியாக உள்ளன. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69434-ஆக பதிவாகியுள்ளது.