காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 494. அதேபோல் இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 652- ஆக உள்ளது. இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் இறப்பு எண்ணிக்கை 0 . அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1534, செங்கல்பட்டு மாவட்டத்தில்  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இன்று வீடு திரும்பிய எண்ணிக்கை 2426.



 


 




 



தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,25,940 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை,  (3,998), கோயம்பத்தூர் (2,865), சென்கல்பாட்டு (1,534), திருப்பூர் (1,497), சேலம் (1,181) உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.



தடுப்பூசி உயிரிழப்பைக் குறைக்கும் : 


முன்னதாக, இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை, கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களைப் பற்றிய விவரங்களை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அளித்துது. கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின்படி, ஜனவரியில் இருந்து 191 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.  


இறந்தவர்களில் 94.5 சதவீதம் பேருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய், நாள்பட்ட சிறுநீரக பிரச்னைகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருந்துள்ளன. 85 சதவீதம் பேர் 50 வயதுக்கு மேலானவர்கள். சமாளிக்க முடியாத இணை நோய்கள் கொண்ட மூத்த குடிமக்களாக இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த பிரிவில் உள்ளவர்களின் இறப்பு எண்ணிக்கை விகிதம்,(159 பேர்)  பேர் 83.2% ஆக உள்ளது.  இறந்தவர்களில், 66 பேர்% தடுப்பூசி போட்டுக் கொள்ளாத (அ) முழு தவணை தடுப்பூசி டோஸ்களை போட்டுக் கொள்ளாதவர்கள்.