மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும்  426 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89138 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 614  நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 83641-ஆக அதிகரித்துள்ளது. இன்று மூன்று நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1215 இருக்கிறது. இந்நிலையில் 4282 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், சிவகங்கை,  ராமநாதபுரம் ஆகிய இடங்களில் விசாரித்தோம்.


விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 311 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55565-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 398 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 51569-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 552  -ஆக  இருக்கிறது. இந்நிலையில் 3444 நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.










சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 113 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22952-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 102நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 21789-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 215-ஆக  இருக்கிறது. இந்நிலையில் 948  நபர்கள் கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.











ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 122 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23993-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 163  நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 22419-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 366 -ஆக  இருக்கிறது. இந்நிலையில் 1208 நபர்கள் கொரோனா பாதிப்பால் ராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.