சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என்ற சந்தேகத்தில் அவரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 


தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாகக் கடந்த நவம்பர் 24-ம் தேதி கொரோனா தொற்றின் உருமாறிய வடிவமான ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் ஒமிக்ரான் தொற்று மளமளவெனப் பரவியது. 


20-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பரவியிருந்த நிலையில், கடந்த 2-ம் தேதி இந்தியாவில் முதன்முதலாகக் கர்நாடகாவில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. கர்நாடகாவில் இரண்டு ஆண்களுக்குத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 


அதைத் தொடர்ந்து குஜராத்தில் ஒருவருக்கும் மகாராஷ்டிராவில் மும்பையில் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் இன்று  டெல்லியில் ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதி  செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்தது. தான்சானியா நாட்டில் இருந்து டெல்லி திரும்பிய நபருக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒமிக்ரான் உறுதியானது. இதையடுத்து தொற்று பாதிப்பு 5 ஆக உயர்ந்தது. 


இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 


நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவருடன் வந்த அவரது மனைவி, மகனுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


 






இருப்பினும், ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக  கன்னியாகுமாரி மாவட்ட சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண