கடந்த 24 மணி நேர பாதிப்பு:


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 217 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 57 ஆயிரத்து730க்கு மேல் உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 58,215 ஆக உள்ளது.



 


மாநிலங்கள் நிலவரம்:


அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,024 பேரும், கேரளா மாநிலத்தில் 3,428 பேரும் கொரோனா தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் 476 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாநிலங்களில் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 100-க்கு கீழ் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


உயிரிழப்பு:


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில்  கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5லட்சத்து 24 ஆயிரத்து 803 ஆக உள்ளது.





குணமடைந்தோர்:


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7, 624 பேர் கொரோனா தொற்றலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 4,26,74,712 பேர் கொரோனா தொற்றலிருந்து குணமடைந்துள்ளனர்.


தமிழ்நாடு:


பல மாதங்களுக்கு பிறகு நேற்று ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா தொற்று நிலவரம்.