Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் 1,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் 1,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 26 பேர் உயிரிழப்பு!
கேரளாவில் இன்று புதிதாக 20,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17,792 பேர் குணமடைந்த நிலையில் ஒரே நாளில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவையில் நாளை முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி. முக்கிய சாலைகளில் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள் ஞாயிற்றுக்கிழமையில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை 50% பேர் அமர்ந்து சாப்பிடலாம்; இரவு 9 மணி வரை பார்சல் சேவை வழங்கப்படும் - கோவை ஆட்சியர்
கேரளாவில் கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 20772 தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா நோய்த் தொற்று விகிதம் (Positivity rate) 13.5 சதவீதமாக உள்ளது என்றும் கேரள சுகாதாரத்துறை கூறியுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 160826 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே கேரளாவில் நேற்றும், இன்றும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கைகளை எடுக்க 6 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை மத்திய அரசு அம்மாநிலத்திற்கு முன்னதாக அனுப்பியது.
ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு RT-PCR பரிசோதனை கட்டாயம்.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை காண்பித்தும் தமிழகத்திற்குள் வரலாம்.
ரயில் பயனாளிகளுக்கும் இது பொருந்தும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட 6 நகரங்களில் ஜப்பான் அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஜப்பானின் அதிகபட்ச ஒருநாள் இதுவாகும்.
மலேசியா நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17,786 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மலேசியாவின் அதிகபட்ச ஒருநாள் இதுவாகும்.
கோவிட் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலில் ஆடி பெருக்கை முன்னிட்டு இன்று முதல் வரும் 3ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகும் தொகுப்புகளில் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது.
பாதிப்புகளின் விவரணையாக்கம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தடம் அறிந்ததன் அடிப்படையில் கட்டுப்பாட்டு மண்டலங்களை நிர்ணயிப்பது.
தற்போதைய மருத்துவ உள்கட்டமைப்பை, குறிப்பாக ஊரகப் பகுதிகள் மற்றும் குழந்தைகளுக்கான பிரிவில் வசதிகளை அதிகப்படுத்துவதற்காக அவசரகால கொவிட்- 19 நடவடிக்கை தொகுப்பு-II-ஐ பயன்படுத்தி, அதனை அவ்வப்போது ஆய்வு செய்வது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதல்களின் படி உயிரிழப்புகளின் எண்ணிக்கையை பதிவு செய்வது.
உள்ளிட்ட ஆலோசனைகளை மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநிலங்களுக்கு வழங்கினார்.
தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கோவிட்-19 நிலவரம் குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டம் மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா, அசாம், மிசோரம், மேகாலயா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டன.
கோவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, மாநிலத்தில் உள்ள முக்கிய ஆலயங்களில், பொதுமக்கள் வழிபாட்டிற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் உணவருந்த அனுமதித்தால் அபராதம் விதிக்கப்பட்டு தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
Background
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதிகளில் சுழற்சி முறையில் RTPCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -