திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 122 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33715-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 10 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 32778-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 653 இருக்கிறது. இந்நிலையில் 284 கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேனி , தென்காசி , நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் விசாரித்தோம்.
நெல்லை மாவட்டத்தில் இன்று மட்டும் 415 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51769 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 65 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 49612ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 438 இருக்கிறது. இந்நிலையில் 1719 கொரோனா பாதிப்பால் நெல்லை சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் இன்று 134 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44098-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 12 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 43147-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 524 இருக்கிறது. இந்நிலையில் 427 கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டத்தில் இன்று மாவட்டத்தில் 153 பேர் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27791ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 11 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்..இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26987ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் தென்காசிமாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 486 இருக்கிறது. இந்நிலையில் 318 கொரோனா பாதிப்பால் தென்காசி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் 343 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58541ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 124 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 56592-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளனர் .இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 417 இருக்கிறது. இந்நிலையில் 1532 கொரோனா பாதிப்பால் தூத்துக்குடி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்