Covid Guidelines: திருமணத்துக்கு 100 பேர்.. ஏசி கூடாது.. வேலூரில் மீண்டும் வந்த கொரோனா கட்டுப்பாடுகள்!
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுஇடங்களில் இரு நபர்களுக்கிடையே 6 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்கவேண்டும்.
Just In




அனைத்து வணிக விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களில் கை சுத்தம் செய்தல் கட்டாயமாக்கப்படுகிறது. நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்திடும் கிருமிநாசினி ( Hand Sanitizer ) வைக்கப்படவேண்டும்.
பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம் ( A.C. ) பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது.
திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.
இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருத்தல் கூடாது.
அனைவரும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் கட்டாயமாக போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதால் கொரோனா நோய்தொற்று ஏற்படுவதிலிருந்து காத்துக்கொள்ளலாம் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவரை அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )