கொரோனா தொற்று பரவலாக எல்லா இடங்களிலும் குறைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் நேற்று வரை 7,08735 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே போல் 4,80,308 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 35020 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. 


 



மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும் 125 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71566-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 185 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 69802 -ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1075 இருக்கிறது. இந்நிலையில் 689 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் விசாரித்தோம்.


 



விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 98 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43957-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 148 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 42635 -ஆக அதிகரித்துள்ளது. இன்று 6 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 519 இருக்கிறது. இந்நிலையில் 803 நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 



சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 89  நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17090-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 95 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 16183-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பது ஆறுதல். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 185-ஆக இருக்கிறது. இந்நிலையில் 722  நபர்கள் கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 



 


இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 40 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19399 -ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 100 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 18551-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பது ஆறுதல். இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 326 இருக்கிறது. இந்நிலையில் 522 கொரோனா பாதிப்பால் இராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 



புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மட்டும் 78 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26363-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 130 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25435-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 297 இருக்கிறது. இந்நிலையில் 631 கொரோனா பாதிப்பால் புதுக்கோட்டையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 



 


திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 70 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31215-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 150 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 30160-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 6 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 570 இருக்கிறது. இந்நிலையில் 485 கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் 69 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41851 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 153 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 40429-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர்  உயிரிழந்துள்ளார். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 476 இருக்கிறது. இந்நிலையில் 946 கொரோனா பாதிப்பால் தேனி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 


தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் 91 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53758-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 289 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 52237-ஆக அதிகரித்துள்ளது. இன்று  ஒருவர் உயிரிழந்தார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 368  இருக்கிறது. இந்நிலையில் 1153 கொரோனா பாதிப்பால் தூத்துக்குடி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மட்டும் 48 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47162 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 127 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 46090-ஆக அதிகரித்துள்ளது. இன்று இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 405 இருக்கிறது. இந்நிலையில் 667 கொரோனா பாதிப்பால் திருநெல்வேலி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




தென்காசி மாவட்டத்தில் இன்று மட்டும் 41 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26319 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 173 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25273-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்புகள் இல்லை என்பது ஆறுதல். இதனால் தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 454 இருக்கிறது. இந்நிலையில் 592 கொரோனா பாதிப்பால் தென்காசி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 


இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் -தேனி : 2 ஆயிரம் வருட பழமைகொண்ட சனீஸ்வர பகவான் கோவில் : சிறப்புகள் என்ன?