இந்தியாவில் அனைத்து வயதினரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் 5முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக தயாரிக்கப்படும் கார்பெவாக்ஸ் தடுப்பூசியின் தன்மையைக்குறித்து சோதனை நடத்த இந்திய மருந்துக்கட்டுப்பாடு மையம் அனுமதி அளித்துள்ளது.


உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா தொற்றின் பாதிப்பு மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியது. முதல் அலையை விட இரண்டாம்  அலையின் தாக்கம் அதிகரித்தமையால் பல்வேறு உயிரிழப்புகளை தொடர்ச்சியாக சந்தித்து வந்தோம். இந்த சூழலில் தான் கொரோனா என்ற வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தடுப்பூசிகள் செலுத்தும் முறையை மத்திய அரசு ஆரம்பித்தது. இதன்படி இந்தியாவில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தின்  கோவிஷூல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, மாடர்னா போன்ற தடுப்பூசிகள் மக்களின் பயன்பாட்டில் உள்ளது.





ஏற்கனவே இந்தியாவில் தயாரிப்பட்ட குழந்தைகளுக்கு வலியே தெரியாமல் போடப்படும்  Zycov D கொரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தைப்பெற்றுள்ளது. இதற்கிடையில் பாரத் பயோடெக் நிறுவனம், 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோவாக்சின் 2 மற்றும் 3 ஆம் கட்ட பரிசோதனைகள் நடைபெற்றுவருகிறது.  மேலும் சீரம் சிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் 2 முதல் 17 வயதிலான குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகளுக்கான சோதனையை நிபந்தனைகளுடன் நடத்துவதற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுத்திருந்தது.


இந்த வரிசையில், இந்நிலையில் தற்போது 5 முதல் 18 வயது குழந்தைகளுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை ஹைதராபாத்தை மையமாகக்கொண்ட பயோலாஜிக்கல் .இ லிமிடெட் நிறுவனத்தின் மூலம்  இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்துள்ளது.  ஆனால் இந்த ஆய்வுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கொரோனாவிற்கு எதிரான கோர்பேவாக்ஸ் தடுப்புசி, ஒரு RBD புரத துணை அலகு தடுப்பூசியாகும். இவை தற்போது பெரியவர்களுக்கு 2/3 மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு அமைச்சகம் கொரோனா தடுப்பூசிதொடர்பான அறிவிப்பினை வெளிட்டப்போது, டிசம்பர் மாதத்திற்குள் மத்திய அரசுக்கு 30 கோடி அளவு கார்பெவாக்ஸ் கிடைக்கும் எனதெரிவித்துள்ளது. இதனை ஹைதாபாத்தைச்சேர்ந்த உற்பத்தியாளர்களுடன் 30 கோடி தடுப்பூசி மருந்துகளை தயாரிப்பதற்கான முடிவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்பந்தமிட்டுள்ளது. இதோடு இந்த சோதனைக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் பயோடெக்னாலஜி துறை நிதி உதவியது வழங்கியது மட்டுமில்லாமல், அதன் பரிதாபாத் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் தடுப்பூசிசோதனை மற்றும் மதிப்பீடு ஆய்வுகளை நடத்த உயிரியல் E உடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதன் அறிக்கையில் கூறியுள்ளது.





எனவே இந்த ஆய்வுகள் அனைத்தும் வெற்றிக்கரமாக முடிக்கப்படும் பட்சத்தில், இந்தியாவில் அனைத்து வயதினரும் தடுப்பூசி செலுத்துக்கொள்ளும் நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படும். மேலும் கொரோனா தொற்றின் 3 வது அலை குழந்தைகளைத்தான் அதிகளவில் பாதிக்கும் என்று கூறிவரும் நிலையில் இந்த தடுப்பூசி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.