இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், கொரோனா தொற்று காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி.


முத்தரசன் தமிழகத்தின், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள அலிவலம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். பள்ளிப் பருவத்திலேயே சமூக அக்கறையுடன் செயல்பட்ட முத்தரசன் அலிவலம் இந்திய பொதுவுடமைக் கட்சியின் கிளைச் செயலாளரின் கவனத்தை ஈர்த்தார். எட்டாம் வகுப்போடு படிப்பை கைவிட்ட பின்  முத்தரசன் திருத்துறைப்பூண்டியில், இந்திய பொதுவுடமைக் கட்சியின் பகுதிக் குழு அலுவலகத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அலுவலகத்தில் தலைவர்களுக்கு உதவியாக இருந்தார். அதன்பிறகு கட்சியில் பல பொறுப்புகளை வகித்து, மக்கள் சார்ந்த பல போராட்டங்களில் ஈடுபட்டு, படிப்படியாக உயர்ந்து மாநிலப் பொதுச்செயலாளராக உயர்ந்தார். தேர்தலில் ஒரு முறை மட்டுமே போட்டியிட்டுள்ளார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்தார். தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளுக்கு குறல் கொடுத்து வருகிறார், தமிழக மக்களுக்காக களத்தில் நின்று போராடக்கூடியவர் முத்தரசன்.




இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான முத்தரசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் காரணமாக  இன்று காலை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் இருந்ததால் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி. மருத்துவர்கள் அவருக்கு டொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


கோவையில் சிலிண்டர் வெடித்ததில் வெடித்து சிதறிய கார் ; ஒருவர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?


Bigg Boss 6 Tamil : வெளியேறிய ஜிபிமுத்து.. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல வில்லன்.. எகிறும் எதிர்பார்ப்பு..!