இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க இதுவரை 125 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதல் தவணை தடுப்பூசி 79.29 லட்சம் பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 45. 71 லட்சம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிதாக மேலும் 9,765 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதில், 8,548 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில், 477 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை 99,763 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் 22 ம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் இதுவரை 100 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக அறிவித்தார். அதில், "257 நாட்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி கடினமான இலக்கை இந்தியா எட்டியுள்ளது. 257 நாட்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி கடினமான இலக்கை இந்தியா எட்டியுள்ளது. 100 கோடி டோஸ் செலுத்தியது புதிய சாதனையின் தொடக்கமாகும். மக்களின் ஒத்துழைப்பு தான் இந்த சாதனை செய்ய காரணமானது. இந்தியாவின் தடுப்பூசி திட்டம் உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது . மிகப்பெரிய சாதனையை நாட்டு மக்களாகிய நாம் படைத்திருக்கிறோம். கடுமையான சோதனைக்கு இடையே இந்தியாவிற்கு கிடைத்த வாய்ப்பாக இது மாற்றப்பட்டது
கோவின் இணையதளம் தடுப்பூசி திட்டத்தை நாட்டு மக்களிடம் எளிதில் கொண்டு சென்றது கொரோனா தாக்கத்தால் துவண்டு விடாமல் நாட்டின் வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தினோம். 18 வயதிற்கு மேற்பட்டோரில் 30 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் எளிய மனிதர்களின் தயாரிப்புகளை வாங்குவதிலும் ஆர்வத்தை காட்டியுள்ளோம். நமது நாட்டில் தயாரித்த தடுப்பூசி மக்களை காப்பாற்றியுள்ளது; இனி வரும் காலங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்யும். கொரோனா என்ற பெரும் துயரத்தை சந்தித்த நாம் இனி எந்த துயரத்தை சந்திக்கலாம் என்கிற நம்பிக்கையை பெற்றுள்ளோம். பண்டிகைக் காலங்களிலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொடர்ந்து மாஸ்க் போட வேண்டும்’" என்றார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்