திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்தமாதம் வரை கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் குறைந்தே காணபப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்புவரை தினசரி பாதிப்பு 6 என்ற நிலையில் இருந்தது. தற்போது 40மேலாக அதிகரித்திருக்கிறது. எனவே, மாவட்டத்தில் தொற்றுப் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


இதுவரை மாவட்டத்தில் 55 ஆயிரத்து 544 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 54 ஆயிரத்து 693 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 73 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்பு இல்லை.  


 


 




 


இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 673-ஆக உயர்ந்துள்ளது.மேலும் கொரோனா வைரஸ் தொற்று க்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை பழைய மருத்துவமனை மற்றும் மருத்துவக்கலூரி மருத்துவமனை, செய்யார் மருத்துவமனையில் போன்ற இடங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தற்போது 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாவட்டத்தில்‌ கொரோனா பரவல்‌ மேலும்‌ அதிகரித்தும் , பாதிப்பு வெகுவாகக்‌ அதிகாரிக்க வாய்ப்புள்ளது. இந்த புள்ளி விவரங்கள்‌ திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ உள்ள மருத்துவமனைகள்‌ ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ போன்ற இடங்களில்‌ நேரடியாக கொடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள்‌ அடிப்படையில்‌ வெளியானவையாகும்‌. வெளி மாவட்டங்களில்‌ பரிசோதனை செய்து பாதிப்பு உறுதி செய்யப்பட்ட திருவண்ணாமலை ‌மாவட்டத்தைச்‌ சேர்ந்தவர்களின்‌ எண்ணிக்கை இந்த புள்ளிவிவரத்தில்‌ சேர்க்கப்படவில்லை என சுகாதாரத்‌துறையினர்‌ தெரிவித்தனர்‌.


 




 


அதனைத்தொடர்ந்து , மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கூறுகையில்;  


திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைத்துத்துறை அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குறைவாக இருந்த தொற்று பரவல் தற்போது அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியம். அதோடு, பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு தற்போது எச்சரிக்கைவிடப்பட்டது. நாளை (இன்று) கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், மாவட்டம் முழுவதும் முதல் தவணை தடுப்பூசியை 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் செலுத்தியுள்ளனர். அதேபோல், இரண்டாவது தவணை தடுப்பூசியை 67 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர். மேலும், சிறுவர்களுக்கு 72 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் தொற்று பரவுகிறது. ஆனாலும், அவர்களுக்கு பாதிப்பு அதிகம் இல்லை. வரும் 10ம் தேதிக்கு பிறகு முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.