திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்றின் முதல் பாதிப்பு கடந்த 2020 மார்ச் மாதம் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 21 மாதங்களில் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை உட்பட மொத்தம் 55,464 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில், இரண்டாவது அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்திருந்த நிலையில், ஒமிக்ரான் தொற்று மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியது.மேலும், கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்திருக்கிறது. கடந்த 1ம் தேதி நிலவரப்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 6 பேர் என்ற அளவில் இருந்தது. ஆனால், நேற்று தொற்றினால் பாதித்தோரின் எண்ணிக்கை 73-ஆக அதிகரித்திருந்தது. 


இதுவரை மாவட்டத்தில் 55 ஆயிரத்து 733 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 54 ஆயிரத்து 726 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 102 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்பு இல்லை.  இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 673-ஆக உயர்ந்துள்ளது.மேலும் கொரோனா வைரஸ் தொற்று க்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை பழைய மருத்துவமனை மற்றும் மருத்துவக்கலூரி மருத்துவமனை, செய்யார் மருத்துவமனையில் போன்ற இடங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தற்போது 334 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 




மாவட்டத்தில்‌ கொரோனா பரவல்‌ மேலும்‌ அதிகரித்தும் , பாதிப்பு வெகுவாகக்‌ அதிகாரிக்க வாய்ப்புள்ளது. இந்த புள்ளி விவரங்கள்‌ திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ உள்ள மருத்துவமனைகள்‌ ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ போன்ற இடங்களில்‌ நேரடியாக கொடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள்‌ அடிப்படையில்‌ வெளியானவையாகும்‌. வெளி மாவட்டங்களில்‌ பரிசோதனை செய்து பாதிப்பு உறுதி செய்யப்பட்ட திருவண்ணாமலை ‌மாவட்டத்தைச்‌ சேர்ந்தவர்களின்‌ எண்ணிக்கை இந்த புள்ளிவிவரத்தில்‌ சேர்க்கப்படவில்லை என சுகாதாரத்‌துறையினர்‌ தெரிவித்தனர்‌.இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு கரோனா சிகிச்சை, தடுப்பு நடவடிக்கைக்காக முதல்கட்டமாக ரூ.4 கோடியை அரசு ஒதுக்கி உள்ளது. தற்போது மாவட்டத்தில் தொற்று பாதித்த 114 பேருக்கு செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை,


 




 


திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 91 சதம், இரு தவணை 69 சதம், 18 வயதுக்குள்பட்ட சிறாா்கள் 74.5 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றாா் அவா்.தொடா்ந்து, வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் வடமணப்பாக்கம் கிராமத்தில் ரூ.15.27 லட்சத்தில் கட்டப்பட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கக் கட்டடம், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் மாரியநல்லூா் கிராமத்தில் சிறு காடு வளா்ப்புத் திட்டப் பணி, ஏனாதவாடி, வடங்கம்பட்டு கிராமங்களில் பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்ட பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.ஆய்வின்போது, செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநா் பிரியாராஜ், வட்டார மருத்துவ அலுவலா் ஷா்மிளா, வருவாய் கோட்டாட்சியா் என்.விஜயராஜ், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.