கடந்த 24 மணி நேரத்தில்  புதிதாக 37,379  பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அதே சமயம்,  11,007 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம், தற்போது சிகிச்சைப் பெற்று வருபவரளின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 1,71,830-ஆக அதிகரித்துள்ளது. 




 


கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து, தற்போது 0.49 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.13 சதவீதமாகும். 




 


தினசரி பாதிப்பு விகிதம் 3.24% ஆகும். வாராந்திர பாதிப்பு விகிதம் 2.05% ஆகும் கடந்த 24 மணிநேரத்தில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 482017 ஆக அதிகரித்துள்ளது.


ஒமிக்ரான் பரவல்:


இதற்கிடையே, நாட்டில் ஒமிக்ரான் பரவல் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. டெல்லி, மஹாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 23 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 1892 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 766 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்/ அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 568 பேருக்கும், தில்லியில் 382 பேருக்கும், தமிழ்நாட்டில் 121 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்,100 பேர் ஒமிக்ரான் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.  







மூன்றாவது அலை குறியீடு: 


டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியாவில் முதல் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அதன் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வராததிற்கு முந்தைய வாரத்தில், மரபணு வரிசைப்படுத்தப்பட்ட மொத்த  வைரஸ் மாதிரிகளில், 14% மாதிரிகள் ஒமிக்ரான் மாறுபாடுகளுடன் இருந்தது. கடந்த வாரத்தில், 28 % மாதிரிகள்  ஒமிக்ரான் மாறுபாடுகளுடன் உள்ளது. எனவே, இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க, ஒமிக்ரான் மாறுபாடுகள் அதிகரித்து இருக்கிறது. டெல்டா  மாறுபாடுகள் இந்தியாவில் இரண்டாவது அலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஒமிக்ரான் பரவல் மூன்றாவது அலையை  ஏற்படுத்தி வருகின்றன.  28 % மாதிரிகள் அதிகரிப்பு என்பது இந்தியா மூன்றாவது அலைக்குள் நுழைகிறது என்பதை எடுத்துரைப்பதாக உள்ளது.     





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண