புதுச்சேரியில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 96 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 23 ஆயிரத்து 392 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 157 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 535 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 698 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 100 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 890 (97.97 சதவீதம்)-ஆக உள்ளது.


புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்துவருகிறது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. குணமடைந்தோர் சதவீதம் 97.97. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் சரியாக அணிந்து, தனிநபர் இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடித்து, கை சுத்தம் பேணி, கொரோனா தடுப்பூசியும் போட்டுக்கொண்டால் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபடலாம்” என்று குறிப்பிட்டார். 



 


முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டால் மட்டுமே வழக்கமான நிலை திரும்பும் சூழல் நிலவுகிறது. மதுக்கடைகள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 9 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 5 மணிமுதல் காலை 9 மணிவரை நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்காக திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 100 நபர்கள் வரை பங்கேற்கலாம் என்றும் இறுதிச் சடங்குகளில் 20 நபர்கள் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.



 

ஏற்கனவே புதுச்சேரியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் கொரோனா கட்டுப்படுத்த முடியாமல் எண்ணிக்கை அளவில் பழைய நிலையிலேயே தொடர்கிறது. அடுத்தடுத்து உயிரிழப்புகளும் தொடர்கின்றன. கட்டுப்பாடுகளை இன்னும் தீவிரப்படுத்தினால்தான் அடுத்தடுத்த அலைகளை சமாளிக்கலாம். அதற்கு புதிதாக பொறுப்பேற்ற அரசு, அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 

தமிழகம் மற்றும் புதுவையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் புதுச்சேரியிலும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து கொரோனா தாக்கம் குறைந்ததால் ஜூன் மாத இறுதியில் புதுச்சேரியில் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வந்தது. புதுவையில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.