கரூர் மாவட்டத்தில் புதிதாக 17 நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பதித்தவர்கள் 23018 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று வீடு திரும்புவோர் எண்ணிக்கை 11. இதேபோல் கரூர் மாவட்டத்தில் இதுவரை வீடு திரும்புவோர் எண்ணிக்கை 22,560 ஆகும். கரூர் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர் யாரும் இல்லை. கரூர் மாவட்டத்தில் இன்று வரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 352 பேர். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் உள்ள நபர்கள் 160 ஆகும். 






கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 32 இடங்களில் 11400 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அதேபோல் இன்று 12க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாமும் நடைபெற்றது. நாளையும் தடுப்பூசி முகாம் இருப்பதாக மாவட்ட சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளனர்.





கரூர் மாவட்டத்தில் படிப்படியாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் மாவட்ட மக்கள் சற்று நிம்மதியில் உள்ளன. இந்நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் தமிழக அரசு உத்தரவிற்கிணங்க ஆலயங்கள் திறக்கப்படாததால் பொதுமக்கள் நடமாட்டம் தற்போது குறைவாக உள்ளது. கரூர் நகர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு மையமும் செயல்பட்டு வருகிறது.




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


நாமக்கல் மாவட்டத்தில் தொற்று பதித்தவர்களின் இன்றைய நிலவரம் :-


நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 45 நபர்கள் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதி. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் 48677 ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 53 . நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 47654 ஆகும். இன்று சிகிச்சை பலனின்றி இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளார். அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 469 ஆகும். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 554 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி.




நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை ஒரு நபர்களாக இருந்த நிலையில் தற்போது இன்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி இறப்பு விகிதம் 2 ஆக அதிகரிப்பு. இதனால் மாவட்ட மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் படி மாவட்ட மக்கள் முக கவசம் சமூக இடைவெளி பின்பற்றினால் மட்டுமே தொற்றில் இருந்து நாம் அனைவரும் பாதுகாக்க இருக்க முடியும் என்பதை நாள்தோறும் வலியுறுத்தி வருகிறது மாவட்ட நிர்வாகம்.




கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை சராசரியாக குறைந்து கொண்டு வருகிறது. எனினும், இறப்பு வீதம் நாள் ஒன்றுக்கு இரண்டு நபர்கள் இறந்து வருவதால் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.