கரூர் மாவட்டத்தில், இன்று மட்டும் 24 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,885-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 10 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 22334-ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு இல்லை. இதனால் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 351 இருக்கிறது. இந்நிலையில் 200 நபர்கள் கொரோனா பாதிப்பால் கரூரில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று 1984 நபர்களுக்கு தொற்று பரிசோதனை.
கரூர் மாவட்டத்தில் இன்று பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் 3600 தடுப்பூசிகள் போடப்பட்டன. பின்னர் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்றது, அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டனர். நாளை காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது. தடுப்பூசி முகாம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வரவில்லை. மாவட்டத்தில் இதுவரை 200 நபர்கள் தொற்று பாதிப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
நாமக்கல்லில் கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 62 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47938 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 67 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 46941-ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 461-ஆக இருக்கிறது. இந்நிலையில் 536 நபர்கள் கொரோனா பாதிப்பால் நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று 3647 நபர்களுக்கு தொற்று பரிசோதனை.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 2000-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள், சிறப்பு மையங்கள் மூலம் போடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை இரண்டு நாட்களாக தொற்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். கரூரில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இரண்டு மாவட்ட மக்களும் சற்று நிம்மதியில் உள்ளனர்.
தமிழகத்தில் மேலும் 1,916 பேருக்கு கொரோனா தொற்று, கடந்த 24 மணி நேரத்தில் 1,866 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். 34 பேர் உயிரிழந்துள்ளனர்.