கரூர் மாவட்டத்தில் புதிதாக 18 நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பதித்தவர்கள் 23194 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று வீடு திரும்புவோர் எண்ணிக்கை 13 நபர்கள் ஆகும். இதேபோல் கரூர் மாவட்டத்தில் இதுவரை வீடு திரும்புவோர் எண்ணிக்கை 22683 ஆகும். கரூர் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர் யாரும் இல்லை. கரூர் மாவட்டத்தில் இன்று வரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 352 பேர். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் உள்ள நபர்கள் 159 நபர்கள் ஆகும். 






கரூரில் இன்று ஒரே நாளில் 61 இடங்களில் 20900 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது . நாள்தோறும் 15 க்கு மேற்பட்ட பஞ்சாயத்திலும், 5 க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் பிரத்யேகமாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு முகாம் பழைய அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்காக பிரத்தியேகமாக கல்லூரியிலேயே தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. நாள்தோறும் குறைந்தது 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.






Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


நாமக்கல்லில் தொற்று பதித்தவர்கள்


நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 60 நபர்கள் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதி. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் 49211 நபர்கள் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 52 நபர்கள் ஆகும் . நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 48178 ஆகும்.






நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 475 நபர்கள் ஆகும். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 558 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி.






கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்கள் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு நாள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.