கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மற்ற மாவட்டங்களை காட்டிலும், கோவையில் கூடுதலாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து கோவை முதலிடத்தில் நீடித்து வந்தது. கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்புகள், மீண்டும் குறைந்து வருகிறது. பல நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பில் சென்னை மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 15 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement


கோவையில் இன்று 173 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 36 ஆயிரத்து 77 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2028 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 185 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 31 ஆயிரத்து 783 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 3 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2266 ஆக அதிகரித்துள்ளது.


ஈரோடு,  திருப்பூர், நீலகிரி நிலவரம்


ஈரோட்டில் இன்று 141 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 12 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 148  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 98416 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 96354 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 657-ஆக அதிகரித்துள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் இன்று 67 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 6 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 87 பேர் குணமடைந்துள்ள நிலையில், 767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்தார். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 90305 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 88607 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 931 ஆக அதிகரித்துள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் இன்று 25 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 3 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 34 பேர் குணமடைந்துள்ள நிலையில், 333 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 31758 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31230 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 195-ஆக உள்ளது.