கரூர் மாவட்டத்தில் புதிதாக 17 நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பதித்தவர்கள் 23221 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று வீடு திரும்புவோர் எண்ணிக்கை 13 நபர்கள் ஆகும். இதேபோல் கரூர் மாவட்டத்தில் இதுவரை வீடு திரும்புவோர் எண்ணிக்கை 22710ஆகும். கரூர் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர் யாரும் இல்லை. கரூர் மாவட்டத்தில் இன்று வரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 352 பேர். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் உள்ள நபர்கள் 159 நபர்கள் ஆகும்.
கரூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 65 இடங்களில் 21 ஆயிரத்து 800 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. நாள்தோறும் 15 க்கு மேற்பட்ட பஞ்சாயத்திலும், 5 க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் பிரத்யேகமாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு முகாம் பழைய அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது.
நாமக்கல்லில் தொற்று பதித்தவர்கள்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 66 நபர்கள் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதி. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் 49349 நபர்கள் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 52 நபர்கள் ஆகும் . நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 48285 ஆகும்.
தமிழகத்தில் இன்று 1587 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு. இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 26,37,365 நபர்கள் ஆகும். இதுவரை குணமடைந்து வீடு திரும்பினார் 25,76,112 நபர்கள் ஆகும். தொற்று பாதிக்கப்பட்டு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் 18 நபர்கள் ஆகும். கொரோனா தொற்று பாதித்து இதுவரை 35,073 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.