கரூரில் இன்று புதிதாக தொற்று பாதித்தவர்கள் 16 நபர்கள். இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 22963 ஆக உள்ளது. இன்று வீடு திரும்புவோர் எண்ணிக்கை 16 . இதனால் கரூர் மாவட்டத்தில் 22415 நபர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் யாரும் இல்லை.
இதனால் இதுவரை மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 351 உள்ளது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று வரை 197 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல், கரூர் மாவட்டத்தில் இன்று 2 இடங்களில் தலா 400 தடுப்பூசிகள் மூலம் பொதுமக்களுக்கு போடப்பட்டது. தொடர்ந்து நாளை சிறப்பு முகாம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வரவில்லை. எனினும் நாள்தோறும் 20க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களை பரிசோதனைக்கு ஈடுபடுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் தொற்று நிலவரத்தை தற்போது காணலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 51 நபர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 48221 நபர்கள் தொற்று பாதிப்பு உள்ளனர். இன்று சிகிச்சை முடிந்து 51 நபர்கள் வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 47236 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி இறந்தவர் எண்ணிக்கை 462-ஆக உள்ளது. தற்போது நாமக்கல் மருத்துவமனையில் 523 சிகிச்சையில் உள்ளனர்.
அதேபோல் , நாமக்கல் மாவட்டத்தில் இன்று 1000 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது என தகவல். கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருவதால் சற்று மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
எனினும், தமிழக அரசு கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. ஆகவே பொதுமக்கள் வணிக நிறுவனங்கள், வியாபாரப் பெருமக்கள் தமிழக அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளன.