கரூர் மாவட்டத்தில், இன்று மட்டும் 16 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,813 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 15 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 22,285 -ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு இல்லை. இதனால் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 351 இருக்கிறது. இந்நிலையில் 177 நபர்கள் கொரோனா பாதிப்பால் கரூரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சிறப்பு முகாம் மூலம் நடைபெற்ற தடுப்பூசி முகாம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து நாளை தடுப்பூசி போடுவது குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. அதேபோல் கரூர் மாவட்டத்தில் 10-க்கு மேற்பட்ட பஞ்சாயத்துகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தற்பொழுது கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருவதால் பல்வேறு மாவட்டங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுக்கிணங்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் நீடித்து வருகிறது. 




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


தற்போது கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 20-க்குள் இருப்பதால் தமிழக அரசு அறிவித்துள்ள நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனை பேரில் கொரோனோயில்லாத கரூர் என்ற தலைப்பில் கடந்த ஒரு வார காலமாக பட்டிதொட்டி எல்லாம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று  பாதித்தவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவரும் நிலையில் மாவட்ட மக்கள் சற்று நிம்மதியில் உள்ளனர். 




நாமக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 45 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47734 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 45 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 46682-ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 458 -ஆக  இருக்கிறது. இந்நிலையில் 594 நபர்கள் கொரோனா பாதிப்பால் நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.  அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் இன்று 3000 மேற்பட்ட தடுப்பூசிகள் சிறப்பு மையங்கள் மூலம் போடப்பட்டது. 




நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை இரண்டு நாட்களாக தொட்டு பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் தற்போது சற்று அதிகரித்துள்ளது.